பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

அகநானூறு - மணிமிடை பவளம்



232. வேலனை அழைக்கும் காலம்!

பாடியவர்: கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி, தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

(களவிலே கூடிவருகின்ற காதலர் இருவரும் பலநாட் பகற் குறியிலே சந்தித்து வந்தனர். தினை விளைந்து, தலைவியின் தினைகாவலும் நின்றுவிட, அவர்கள் பகலிற் சந்திப்பதும் மிகவும் அரிதாயிற்று. இரவுக்குறியினை அவர்கள் மேற்கொண்டாலும், அதுவும் பல சமயங்களில் இடையீடுபடுதலால், தலைவியின் வருத்தம் மிகுதியாயிற்று. அவள் உடலின்கண் தோன்றிய மாற்றங்களைக் கண்ட தாய், அது முருகனால் விளைந்ததெனக் கருதி வெறியாடலில் ஈடுபட எண்ணுகின்றனள். இந்த நிலையிலே, இரவுக் குயிடத்தே, தலைவன் சிறைப்புறத்தானாக, அவனை வரைந்து கொள்ளுதற்குத் தூண்டுகின்ற கருத்துடன், தோழி, இப்படித் தலைவிக்குச் சொல்லுவாள் போல அவனுக்குச் சொல்லுகின்றாள்.) -

        காண்இனி-வாழி, தோழி! -பானாள்,
        மழைமுழங்கு அரவம் கேட்ட, கழைதின்,
        மாஅல் யானை புலிசெத்து வெரீஇ
        இருங்கல் விடரகம் சிலம்பப் பெயரும்
        பெருங்கல் நாடன் கேண்மை, இனியே, 5

        குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
        மன்ற வேங்கை மணநாட் பூத்த
        மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
        வியலறை வரிக்கும் முன்றில், குறவர்
        மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் 10

        ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
        விரவுப்பூம் பலியொடு விரைஇ! அன்னை
        கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
        ‘முருகு’ என வேலன் தரூஉம்
        பருவ மாகப் பயந்தன்றால், நமக்கே! 15

தோழி! நீ வாழ்க! நம்முடைய நிலைமையும் நீகாண்பாயாக!

நள்ளிரவு வேளையிலே, மேகம் இடிமுழங்கும் ஒலியைக் கேட்ட, மூங்கிலைத் தின்று கொண்டிருக்கும் பெரிய யானையானது, அதனைப் புலியின் முழக்கம் என்று எண்ணி அச்சங்கொண்டு, பெரிய மலையின் பிளப்பிடங்கள் எல்லாம் எதிரொலி செய்யுமாறு கதறியதாகப் பெயர்ந்து ஒடிக்