பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 241


ஐம்பகுப்பாகிய கூந்தலிலே பெறும் இனிய துயிலை மறந்து, இனியும் அவர் அவ்விடத்தே காலம் நீட்டித்திருப்ப வரல்லர்; (விரைவிலேயே திரும்பிவிடுவர் என்பது கருத்து.)

என்று, பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. அலமரல் - கலக்கம். மழைக் கண் - குளிர்ச்சியுடைய கண். பனி - கண்ணிர்த் துளி. 2 அலர்முலை - பூரித்த பரந்த முலை. 3, எரி கவர்பு உண்டல் - நெருப்புச் சூழ்ந்து பற்றி எரித்தல். 4. பீடு - பெருமிதம்; வளம். 6. மறப்படைக் குதிரை மாறா மைந்தின் - மறவர் டடையும், குதிரைப் படையும் மாறாத ஆற்றலுடையவையாக உடைய7.துறக்கம்-சுவர்க்கம் போக பூமி. 9. பெருஞ்சோறு கொடுத்தல் - படையலிட்டுப் பெருங் கூட்டத்தார்க்கு அளித்துச் சிறப்புச்செய்தல்.13 மடங்கா உள்ளம் - வளையாத நெஞ்சம்.

விளக்கம்: ‘மழை கைவிட்டதென்று யானைகள் தசைப் பற்று அற்றவைகளாகக் கிடந்து வருந்தியிருக்கும் வேனில்’ எனவும் 5ஆவது அடிக்குப் பொருள் கொள்ளலாம். கூளிச் சுற்றம் - கூளியினம், கூளி பேயினத்துள் ஒரு வகை, குள்ளமும் நெட்டையுமானது.

234. பின்னுப் பிணி விட!

பாடியவர்: ‘பேயனார், கழார்க்கீரன் எயிற்றியார் எனவும் பாடம். திணை: முல்லை. துறை: தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(வினை முடிந்தபின்னர், தன்னைக் காணத் துடித்திருக்கும் தன் காதலியின் நினைவு மேலெழத் தலைவன் தன் பாகனிடம், தேரினை விரையச் செலுத்துமாறு, இப்படிக் கூறுகிறான்.)

        கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை,
        நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின்,
        நிரையறை அன்னத்து அன்ன, விரைபரிப்
        புல்உளைக் கலிமா மெல்லிதின் கொளிஇய,
        வள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5

        பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக்,
        கால்என மருள, எறி, நூல்இயல்
        கண்நோக்கு ஒழிக்கும் பண்ண்மை நெடுந்தேர்
        வல்விரைந்து ஊர்மதி-நல்வலம் பெறுந!
        ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பினை 1O