பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

அகநானூறு - மணிமிடை பவளம்


தொழுகின்ற பொலிவற்ற மாலைக்காலத்திலே, யாம் இவ்விடத்தே கிடந்தது வாடியிருக்க, ஈட்டுவதற்கு அருமையான பொருளைத் தேடி வருதலான வினைக்கண் சென்றீரானால்,

பெருந்தன்மை உடையவரே! நீர் காலத்தை நீட்டிக் கொண்டே போவீர் அல்லீரோ?” என்று,

குறியினவும் நெடியனவுமான ஊடற்சொற்களை எல்லாம் கூறி, நேற்றைப் பொழுதும் நம்முடனே இனிதாகப் பலவும் பேசியவளான, இளமைப் பருவத்தளான நலனுடைய ஒப்பற்றவள் இருக்கும் பெரிய நல்ல ஊரானது,

மன்றமும் தோன்றப் பெறாமல், மரங்களும் கண்ணுக்கு மறைந்து போகின்றதே! இனி, எத்தன்மையது ஆகுமோ? என் நிலை இனி இரங்கத் தக்கதே!

என்று, பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சினுக்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2. மன்று - ஊர் மன்றம். மாயும் - மறையும். 3. உலம்பும்- கூக்குரலிடும்.4.ஞெலி-தீப்பந்தம். வார் கோல் அம்பு - நேரிய கோலின் முனையிலே செருகிய அம்பு. 6. விளிபடு பூசல் - ஒருவரையொருவர் விளித்தலினால் பொருந்திய ஆரவாரம், 9. பிறை தொழுஉம் - மணம் பெறாத மகளிர் வளர்பிறை தொழுதலான மரபினை உடையர் என்பர். 13. குறுநெடும் புலவி கூறி - குறுகிய சொற்களால் தான் கொண்டிருந்த நெடிய புலவியைக் கூறி. 15. சிறுநல் ஒருத்தி - சிறியளாகிய நல்லவளான ஒப்பற்றவள்; சிறுமை சிறப்பின் மேற்று.

விளக்கம்: முதல் நாள் ஊடிப் பிணங்கி உரை குளறிநின்ற தலைவியின் நிலையை நினைந்து, பிற்றை நாள் மாலையில் வழியிடையுள்ளவனாகிய தலைவன், தன் நெஞ்சோடு கூறிப் புலம்பியது இது என்க. ‘மன்றுந் தோன்றாது மரனும் மாயும் என்றது ஊரும் கண்ணுக்கு மறைந்தது பற்றியது.

பாடபேதங்கள்: 1 அணிதோ தானே எவனாகுவங்கொல்.14 நெருநையும்.

240. புன்னைச் சோலைக்கு வருக!

பாடியவர்: எழுஉப்பன்றி நாகன் குமரனார். திணை: பாலை. துறை: தோழி, இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது.

(இரவுக்குறியிடத்தே வந்து கூடுபவனாகிய தலைவனிடம், தோழி, இரவுக்குறியின் ஏதங்களை நினைந்து தலைவிபடுகின்ற