பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. நகை - நகைப்பதற்கு உரிய செய்தி. அல்கல் - நேற்று. 2. வயநாய் வலிமையுள்ள நாய். எறிந்து - எதிர்த்து வெருட்டி பறழ் - குட்டிகள்.3.இளையர்-வேடர் 4. நான்முலைதொங்கும் முலை. பிணவல் - பெண் பன்றி. சொலிய தப்பிச் செல்ல. 5. அரும் புழை முடுக்கர் - அரிய புழையிடமாகிய முடுக்கர் ஆட்குறித்து - ஆளைத் தாக்குதல் குறித்து. 6. தறுகண் பேராண்மை; அஞ்சாமை 8. பெருவிறல் - பெரிய வல்லாளன்; பெருவிரற் கிள்ளி எனவும் கருதலாம்.12, ஏந்து குவவு மொய்ம்புநிமிர்ந்த பணைத்த வலிமையுடைய தோள்கள்.

உள்ளுறை: பன்றியானது தன்னுடைய பெண் பன்றிக்கு ஊறுபாடு நேராமல் காத்து நிற்கும் தறுகண்மையுடைய நாடனாதலின், நமக்கு ஊரலராலும் இற்செறித்தலாலும் வரும் பழியையும் துன்பத்தையும் தானே முன் நின்று போக்குவன் என்றனள்; அவன் விரைவிலே வந்து மணப்பான் என்பது குறிப்பு.

மேற்கோள்: ‘வந்தோன் செவிலியை எதிர்த்துழிக் கூறியது” எனத் தலைவி கூற்றிற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி, “வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் என்னும் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டினர்.

‘நகை நீ கேளாய் தோழி’ என்பது, ‘தன் பேதைமை பொருளாக நகை பிறந்தது எனவும், ‘நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே என்பது, “பிறர் எண்ணியது பொருளாகத் தன்கண் நகை பிறந்தது” எனவும், எள்ளல் இளமை என்னுஞ் சூத்திர உரையிலே, பேராசிரியர் கூறுவர்.

பாடபேதம் : 2. வலநாய், 3. மடக்கினையோடு.16. நல்லோள் மன்றம் கூய்ப் பெயர்ந்தோளே.

249. அருளும் அலரும்!

பாடியவர்: நக்கீரனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: கொடை வள்ளலான வேம்பிக்கு உரிய முசுண்டை என்பவனைப் பற்றிய செய்திகள்.

(பிரிந்து சென்றவனான தலைவன் வாராது காலந்தாழ்க்க, அதனால் தலைவியின் உடல் நலமும் அழிய, அதனால் ஊரிலே அலரும் பெரிதாக எழ, அதுகண்டு வருந்திய தோழிக்குத் தலைமகள் தன்னுடைய ஆற்றாமையினை இவ்வாறு சொல்லுகின்றாள்)

        அம்ம-வாழி, தோழி!-பல்நாள்
        இவ்வூர் அம்பல் எவனோ? வள்வார்
        விசிபிணித்து யாத்த அரிகோல் தெண்கிணை