பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

அகநானூறு - மணிமிடை பவளம்


        வந்துவினை முடித்தனம் ஆயின், நீயும்,
        பணைநிலை முனைஇய, வினைநவில் புரவி
        இழைஅணி நெடுந்தேர் ஆழி உறுப்ப,
        நுண்கொடி மின்னின்; பைம்பயிர் துமியத்,
        தளவ முல்லையொடு தலைஇத், தன்னென 15

        வெறிகமழ் கொண்ட வீததை புறவின்
        நெடிஇடை பின்படக் கடவுமதி’ என்று யான்
        சொல்லிய அளவை, நீடாது, வல்லெனத்,
        தார்மணி மாஅறி. வுறாஅ,
        ஊர்நணித் தந்தனை, உவகையாம் பெறவே! 2O

இடையிடையே நரைமயிர் விராவித் தோன்றும் நறிய மெல்லிய கூந்தலையுடையவர்; செவ்விய முதுமை எய்தப் பெற்றவர்; செவிலித் தாயர்கள். அவர்கள், பலப்பல வகையாகப் பேணிப் புனைந்து நின்னைப் பாராட்டியும் வருபவர். பொன்னாற் செய்யப்பெற்ற கிண்கிணிச் சதங்கையின் நலத்தைப் பெற்றுள்ள சிவந்த பாதங்கள், வீட்டின் முற்றத்திலே மணல் மலிந்த நிலத்திலே, தடம் பதியுமாறு ஒடியாடி விளையாடுபவர். ஆய மகளிர்கள். வீட்டிலே தங்கி வாழும் புறாவினது சிவந்த கால்களையுடைய சேவலானது, தன்னுடைய பெடையோடும் குறுகக் குறுகப் பறந்துபறந்து மேலே செல்லுமாறு அவற்றைப் பறக்கவிட்டு, அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி விளையாடும் தன் தோழியராகிய அவர்களைக் காணும்போதெல்லாம், நம்மீது நினைவு கொள்ளுகின்றவள் அழகிய நெற்றியினை உடையவளான நம் தலைவி. அவள், தனித்திருக்கும் துயரோடுள்ள மிகுந்த துன்பம் அனைத்தும் நீங்குமாறு -

வேந்தற்கு உறுவதாகிய தொழிலோடு வேற் றுநாட்டிலே வந்து தங்கி, அந்தச் செயலையும் நாம் செய்து முடித்தனம்; ஆதலினாலே,

நீயும் பந்தியிலே கட்டுண்டு நிற்றலை வெறுத்த, செல்லும் செலவிலே பயின்ற, குதிரைகள் பூட்டிய, அணிகள் அணியப் பெற்ற நெடுந்தேரின் சக்கரங்கள் நுண்மையான மின்னுக் கொடிபோல நிலத்திலே ஊடறுத்துச் செல்ல, அதனால் வழியிடையேயுள்ள பசுமையான பயிர்கள் அறுபட்டுப் போகவும், செம்முல்லை வெண் முல்லையோடு கூடிக்கொண்டு ‘தண்’ என்ற வெறி மணத்தை வீசிக் கொண்டிருக்கும் மலர்கள் செறிந்து காட்டினது நெடுவழியும் பிற்பட்டுப் போகவுமாக விரையச் செலுத்துவாயாக’ என்று, யான் சொல்லிய அளவிலேயே,