பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

அகநானூறு - மணிமிடை பவளம்


        விரைசெலல் இயற்கை வங்கூழ்,
        கோடுஉயர் திணிமணல் அகன்துறை, நீகான் 5

        மாட ஒள்ளி மருங்கு அறிந்து ஒய்ய,
        ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
        கழியா மையே, அழிபடர் அகல,
        உருவர் மனனால்-தோழி!-தண்பனைப்
        பொருபுனல் வைப்பின் நம்ஊர் ஆங்கண், 10

        கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப்
        பெருவளம் மலர அல்லி தீண்டிப்,
        பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
        கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க,
        அறன்இன்று அலைக்கும் ஆனா வாடை 15

        கடிமனை மாடத்துக் கங்குல வீசத்,
        ‘திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய,
        நிரைவளை ஊருந் தோள்’ என,
        உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.

தோழி! உலகம் புடைபெயர்ந்தது போன்று அச்சம் விளைவிக்கும் நாவாய்கள், புலால் மணமுடைய அலைகள் கொண்ட பெரிய கடலின் நீரிடையிலே, நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் தங்கியிருத்தல் ஏதும் இல்லாதபடியாக விரைந்துசெல்லும் இயற்கையினதாகிய காற்றானது, அவற்றை அசைத்துச் செல்லுமாறு செய்ய, நாவாய் ஒட்டுவான், கரை உயர்ந்த மணல் செறிந்த துறையினிடத்தே இருக்கும், மாடத்து மீதுள்ள ஒளிவிளக்கால் திசையறிந்து அவற்றைச் செலுத்தப், பொருளிட்டும் முயற்சி காரணமாக நம்மைப் பிரிந்து, கடல்மேற் சென்றவர் நம் தலைவர்.

நீர்வளமிக்க மருதநிலமாகிய நீர்மோதும் நாட்டிலேயுள்ள நம்முடைய ஊரினிடத்தே வாடையும் எழுந்தது. அது, கருவிளையிள் பூவோடு மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின், மிக்க செழுமையுடைய பூக்களின்மீது மோதி, அவற்றின் அகவிதழ்களை அசைத்து, மகரந்தங்களை உதிர்க்கும்; பலாக்காய் போலும் புறத்தினையுடைய பசுமையான பழங்களைக் கொண்ட பாகற்கொடிகள், கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்திலே கிடந்து அசைந்தாடுமாறு செய்யும்; அறமற்ற வகையிலே இப்படி அனைத்தையும் வருத்தும் வாடையானது, கவலையுடைய நம் மனையின் மாடத்திலேயும் இரவெல்லாம் புகுந்து வீசும். திருந்திய அணிகள் நெகிழ்ந்து வீழவும்,பெரிய அழகெல்லாம்