பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

அகநானூறு - மணிமிடை பவளம்


வெண்மையான பாம்புகள் பிறழும்படியாகப் புற்றினைப் பெயர்த்துக் கொண்டிருக்கும். அத்தகைய மலைப் பக்கங்களிலே,

பாதிரியின், தேன்பொருந்திய கூனலான பெரிய பூக்களின் வாடல்கள் நாறிக்கொண்டிருக்கும் வேனிற்காலத்தின் பகற்பொழுதிலே, சுரநெறியின் கண்ணே, அரிகளைப் பொருந்திய சிலம்புகளையுடைய நின் சிறிய அடிகள் சிவக்குமாறு, எம்முடன் ஒருவழியே பொருந்தி வருபவளாயினை.

பொலிவுற்ற கூந்தலை நெருங்க வாரி, அரும்பு இல்லையாக மலர்ந்த அழகான பூக்களையுடைய வெண்கடம்பினது, வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கின்ற மலர்களைத் தொடுத்துச் சூடியுள்ள, நின்னுடைய தேன் ஒழுகும் கூந்தலிலே, குறியனவாகப் பலவாக வந்து மொய்க்கும் வண்டுகளைக் கடிந்து ஒட்டி நின்னைப் பாதுகாத்தலைக் கூட அறியாதவள். நீ

இப்பொழுதோ, அழகு கொள்ளுமாறு, நுண்ணிய கோற்றொழினையுடைய ஒளிபொருந்திய வளையல்கள் ஒலி முழங்கும் முன் கையினையுடைய, மெல்லிய சந்தினையுடைய பணைத்த நின்தோள்கள் விளக்கமுற, வீசி வீசி வழிநடப்பதற்கும் நீ வல்லமை உடையவளாயினையே!

என்று, உடன் போகா நின்ற தலைமகட்குத் தலைமகன் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. வேனிற் பாதிரி - வேனிலுக்கு உரிய பாதிரியும் ஆம். கூனி மாமலர் - கூனலான பெரிய மலர். 2. நறைவாய் - தேன் பொருந்திய வாடல் - உதிர்ந்து வாடிய இதழ்கள். 3. அரியார் சிலம்பு - அரிகள் பொருந்திய சிலம்பு; அரிகள் இடப்பட்ட ஒலிக்கும் சிலம்பும் ஆம். 4. ஓராறு ஒர தன்மைத்தான நிலை; ஒன்றுபட்ட நிலை; அது கலந்த கேண்மையைக் குறித்தது. 5. பொம்மல் - பொலிவு. பொதுள நெருங்க. 7 அலரி - மலர்ந்த பூக்கள். 8. குறும்பல குறியதான பல வண்டினம். மொசிக்கும் - மொய்க்கும் 9. ஒம்பல் - கூந்தலின் அழகுப் புனைவினை ஒம்புதலும், தன்னுடைய நலனை ஒம்புதலும்.10.எல் வளை - ஒளியுடைய வளைகள் தெளிர்க்கும்ஒலிக்கும்11. இறை - சந்து. பணைத் தோள் - மூங்கில் போன்ற தோளும் ஆம். விளங்க - விளக்கமுற வெளிப்பட்டுத் தோன்ற 14. கவை - கவட்டைக் கொம்பு.15. தீமூட்டு - தீ மூட்டுவதற்கான எரி துரும்பு 19. அல்கிரை - இரவு வேளைக்கான இரை. 20. வெள் அரா - வெண்மையான பாம்பு, மிளிர பிறழ்ந்து கிடந்து ஒளிரவும் ஆம். 21. பிள்ளை எண்கு கரடியின் குட்டிகள். மலைவயின் - மலையிடத்து.