பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 299



தோழி! அதனைக் கண்டு யாமும் மேற்செல்லுதலைக் கைவிட்டோமாக, அருஞ்சுரமாகிய அவ்விடத்தேயே தங்கியிருப்பேமும் ஆயினேம்.

என்று, புணர்ந்துடன் போயின், காலை, இடைச்சுரத்துப் பட்டதனை, மீண்டுவந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. தகடு-இதழ்.9.அதிரல் - காட்டுமல்லிகை; புனலி எனவும் சொல்வர்.3.அழுத்தி- செருகி வைத்து.4. மராஅம் - வெண்கடப்ப மரம். வான் - பெரிதான கோல் - கோற்றொழிலினையுடைய, 5. இலங்கு வளை - விளங்கும் வளைகள். தெளிர்ப்ப - ஒலிசெய்ய.6. இயலி-நடந்து.7. சிறு புறம் - முதுகுப்புறம், 8. ஒய்யென - விரைவாக, 9. மாகொல் நோக்கம் - மானின் பார்வையும் வெல்லும் மடம்பட்ட நோக்கம். 10. இறைஞ்சியோள் - வணங்கியோள். 12. அல்கியேம் - தங்கினேம். இரும்புலி - பெரிய புலி.13 களிபட்டு களிவெறிக்கு உட்பட்டு.14, வில்லோர் வில்லால் வாழ்வு நடத்துபவராகிய கானவர். 15. வல்வாய் - வலிய முகப்பு.

விளக்கம்: ‘புலி முழக்கமும், கானவர் களியாட்டயர்தலும் கேட்டு’ என்பதனால், பொழுது இரவுவேளை என்பதை உணர்த்தினான். அவ்வொலிகட்கு அவள் அஞ்சுவாள் என, அவன், நின் முதுகின் அழகைக் காண்பேம்’ என, அவள் நினைவெல்லாம் அவன் மீதே நிலை பெற்றிருந்தமையால், நாணித் தலைகவிழ்ந்தாள் என்க.

மேற்கோள்: மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது என இச் செய்யுளை, “மரபுநிலை திரியா மாட்சியவாகி’ என்னுஞ் சூத்திர உரையிலே நச்சினர்க்கினியர் காட்டுவர்.

262. ஆனா உவகையேம்!

பாடியவர்: பரணர்: திணை: குறிஞ்சி, துறை: இரவுக் குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: அன்னி மிஞலிக்காகத் திதியன் கோசரை அழித்தமை, அவள் வெற்றிக் களிப்பு; பேகனின் மலைவளத்து மாண்பு முதலிய செய்திகள்.

(இரவிலே குறித்த இடத்திலே தன் தலைவியுடனே கூடி இன்புற்று வருகின்ற தலைவனின் நெஞ்சம், அந்த மகிழ்வினாலே பூரித்துக் களி துள்ளுகிறது. தன்னுடைய மகிழ்வின் சிறப்பை, அவன், தன் நெஞ்சிற்கு இப்படிச் சொல்லுகிறாள்)