பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 1. இலங்கு வளை - விளங்குகின்ற வளை. 2. கலங்கு அஞர் உழந்து கலங்கும் துன்பத்தினை அடைந்து வருந்தி, 3. வலம்படு முரசு - வெற்றிமிக்க முரசு. 4. முந்நீர் - கடல். கடம்பு - கடம்பாகிய பகைவரது காவல் மரம். 5. வணங்கு வில் வளைந்த விற்பொறி. 6 மாந்தை - சேரலாதனின் கோநகர். முற்றம் - கோயில் முற்றம் கோயிலாவது அரண்மனை.7. பணிதிறை தந்த - பணிந்து திறையாகத் தந்த 8 ஆம்பல் - பேரெண்.10. நிலத்தினத் துறந்த நிலந் தின்னுமாறு துறந்த நிலத்தின்னல் - எடுத்தினத் துறந்த நிலத் தின்னுமாறு துறந்த நிலந்தின்னல் - எடுத்துப் பயன்படுத்துதல் இன்மையால் 12. செங்கோல் - சிவந்த கொம்பு. 13. கருங்கால் - கரிய காம்பு. மராஅம் - மரமரம். வாஅல் - வெண்மையான 13. சுரிந்து வணர் பித்தை சுரிந்து வளைந்த தலைமயிர் 15. கல்லா மழவர் - ஆறலைத் தலையன்றிப் பிற தொழிலைக் கல்லாத கல்லா மழவர் 16. வருநர் - வருகின்ற வாணிகச் சாத்தினர். வெருவரு - அச்சம் வருகின்ற. 17. பழிதீர் - பழியினின்றும் நீங்கிய, -

விளக்கம்: காதலர் பொருளால் மயங்கியும், போரால் வருந்தியும் வேற்று நாட்டுத் தங்குவாரல்லர் என்று தலைவனது புகழும் வீரமும் எடுத்துக் கூறித் தோழி வற்புறுத்தினாள் என்று கொள்க. பழிதீர் காதலர் ஆதலின், செய்வினை முற்றாமையே, அவர் வரும் நாள் கடந்து போவதற்குக் காரணம் என்பதுமாம்.

128. தளரடி தாங்கும் நெஞ்சு!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: இரவுக் குறிவந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

(இரவுக்குறியிடத்திலே வந்து தலைவன் வரவுக்கு எதிர் நோக்கிக் காத்திருக்கும் தலைவி, தன் தோழியிடத்திலே தன்னுடைய மனநிலையினை இப்படிக் கூறுகிறாள். அவன், சிறைப் புறத்தே நின்று கேட்டுக்கொண்டிருப்பான் என்பது குறிப்பு)

        மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;
        கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
        யாமம் கொளவரின் கணைஇக், காமங்
        கடலிலும் உரைஇக், கரைபொழி யும்மே
        எவன்கொல்-வாழி, தோழி! -மயங்கி 5

        இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
        என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,