பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 315


இயல்பாகவே உள்ளத்தைச் செலுத்தியவளாதலால், தானும் இரவுக்குறிக்கு இசைவாள் என்பது கருத்தாகும்.

உள்ளுறை: குருதிபடிந்த செங்களத்தினின்றும் எழுந்த புலால் நாற்றம் நீங்க. வேங்கை மல்லிகையொடு கலந்து நறு மணம் கமழும் என்றனள், அது தலைவனும் களவினால் வரும் ஊரலர் முதலியவற்றை விரைவிலே மணம்பூண்டு இல்லறம் தொடங்குவதன் மூலம் போக்குவான் எனக் கூறினாளாம்.

மேற்கோள்: செய்யாய் என்னும் முன்னிலைவினைச்சொல் முன்னிலை ஏவல் உடன்பாடாய் நின்றதற்கு, இப்பாடற் பகுதியைச், ‘செய்யென் கிளவி யாகிடன் உடைத்தே’ என்னும் சூத்திர உரையிலே நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல், சொல். 450)

பாடபேதங்கள்: 2. பகைநுதல் யானை, 3. பொலிவற. 14. எய்தினேனே.

269. விரைந்து வந்தனர்!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை: பாலை, துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி s வற்புறுத்தியது. சிறப்பு: வாணனின் சிறுகுடியினது வளம்; நடுகல் வழிபாடு முதலிய செய்திகள். -

(தலைவன் பிரிந்து சென்றனனாக, அதனால் தலைவி பெரிதும் வாடித் தன் நலன் அழிய, அது கண்டு மனம் வருந்திய தோழி அவளிடம் சென்று, அவன் விரைந்து வந்து கொண்டிருக் கின்றான்’ என்று உறுதி கூறி, அவளைத் தேற்றுகின்றாள்.)

        தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!
        நெறிஇருங் கதுப்பின் கோதையும் புனைக!
        ஏறுடை இனநிரை பெயரப் பெயராது,
        செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய
        தறுக ணாளர் நல்லிசை நிறுமார், 5

        பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,
        நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
        அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,
        நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
        அம்புகொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின் 10

        செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
        வரிவண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழற்கால்