பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/336

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 321


        திருந்துகோல் ஆய்தொடி ஞெகிழின்,
        மருந்தும் உண்டோ, பிரிந்துறை நாட்டே?

தலைவனே! புள்ளிகளையும் வரைகளையும் கொண்ட சிவந்த கால்களையுடைய புறவுச்சேவலானது, தன்னுடைய சிறிய புல்லிய பேடையுடன் கூடியதாகத் தொலை தூரத்திலுள்ள இடத்திற்கும் பறந்து செல்லும். அவ்விடத்து விளங்கும் மணற் பாங்கான இடத்திலே, தனக்கேற்ற சிறுசிறு பரற்கற்களையும் ஆராய்ந்து பொறுக்கி உண்ணும். பின்னர், வரிகளையுடைய மரற்செடியும் வாடிப் போயிருக்கின்ற, மழையற்றுக் கிடக்கும் அகன்று இடத்ததான குன்றுகளின் பக்கங்களையுடைய, ஊறு பொருந்திய பாலைநிலத்தினைக் கடந்து, நெடுந்துரம் நடந்துவந்த நீர்வேட்கை யுடையவராகிய புதியவர்களின், போகின்ற உயிர்களைப் போகாது நிறுத்திய சுவையுடைய காய்களைக்கொண்ட நெல்லி மரத்தினது, பல காய்களைக் கொண்ட அழகிய கிளையிலே வந்திருந்து அகவிக் கொண்டுமிருக்கும். அத்தகைய காட்டுவழியிலே, நீரும் சென்று, அவ்விடத்தவர் ஆகியும் நின்று? கொணர்ந்து தருகின்ற நிலைத்தற்கு அரியதான பொருளாகிய பிணியினை, இப்போது நினைந்துள்ளிர். அங்ஙனமாயின், நும் செயல் வன்மை உறுவதாகுக!

களிப்புமிகுந்த கள்ளில் என்ற ஊரினையும், நல்ல தேரினையும் உடையவன் ‘அவியன்’ என்பவன். அவனுக்கு உரியதான, அசைதல் பொருந்திய இளமேகங்களைத் தன்பால் சூடித் தோன்றுகின்ற, பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்ற, மலைப்பிளப்பு இடங்களிலே வளர்ந்திருக்கும் மூங்கில்களின் கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைப் போல்வன, இவளுடைய நீண்ட மென்மையான பணைத்த தோள்கள். அவற்றிலுள்ள, திருத்தமான கோற்றொழிலையுடைய அழகிய தொடிகள் நெகிழ்ந்து வீழுமானால் நீபிரிந்து சென்று தங்குகின்ற நாட்டிலே, அதனை வீழாது அவ்விடத்திருந்தே மாற்றுதற்குரிய மருந்தும் யாதானும் நின்னிடத்தே உளதோ? (உளதன்றாதலின் செல்லுதலும் வேண்டாவென்பது முடிபு);

என்று, செலவுணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்கச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 3 மணல் இயவு - மணற்பாங்கான நெறியும் ஆம். 5. கோட்சுரம் - துன்பம் மிகுந்த சுரம், உயிரைக் கொள்ளுதலான தன்மையுடைய சுரமும் ஆம், 9. அவனிராகி - அவ்விடத்து உறைபவராகி. 10. பொருட் பிணி - பொருளின்