பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

அகநானூறு - மணிமிடை பவளம்


யானைகளே முன் காலத்துப் போரிலே முன்னணியிலே நிறுத்தப் பெற்றிருப்பன என்பதனையும் நினைக்கவும் பரி’ என்பது ஆற்றிலே அணை கட்டுவார் நிறுத்துகின்ற மரங்கள்; அவை, நீர்ப் போக்கைத் தடுக்க உதவுவன; வெள்ளம் அவற்றையும் இழுத்துக்கொண்டு செல்லும்; பரி என்பது சிறு படகுகள் எனச் சில பகுதிகளில் இந்நாளும் வழங்குவது கொண்டு அவ்வாறும் கொள்ளலாம். இப்படிச் சொல்வதன் கருத்து, விரைவிலே வரைந்துவந்து மணந்து கோடலைக் குறித்தது என்க.

பாடபேதங்கள்: 6. பெருவரை 11. சிவப்பப் பன்னாள்.

279. நம்முடைய மதுகையன்!

பாடியவர்: இருங்கோயன் ஒல்லையாயன் செங்கண்ணனார்: இருங்கோக் கண்ணனார் எனவும் பாடம். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(பொருள் தேடிவரும் பொருட்டாகத் தன்னுடைய தலைமகளைப் பிரிந்து சென்றான் ஒரு தலைமகன். இடை வழியிலே, அவளுடைய நினைவே பெரிதும் சூழ்ந்து தன்னை வருத்தத் தன் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றான்.)

        ‘நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
        ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணுஉ
        ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல
        பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
        மென்முலை முற்றம் கடவா தோர் என, 5

        நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து இயைந்து
        உள்ளம் பொத்திய உரம்சுடு கூர்எரி
        ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
        கடறுஉழந்து இவனம் ஆகப், படர்உழந்து
        யாங்குஆ குவள்கொல் தானே-தீம்தொடை 10

        விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
        மலியூம் பொங்கர் மகிழ்குரற் குயிலொடு
        புணர்துயில் எடுப்பும் புனல்தெளி காலையும்,
        நம்முடை மதுகையள் ஆகி, அணிநடை
        அன்னமாண் பெடையின் மென்மெல இயலிக், 15

        கையறு நெஞ்சினள், அடைதரும்
        மைஈர் ஒதி மாஅ யோளே?