பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/362

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 347


குடந்தைஅம் செயி கோட்பவர் ஒடுங்கி,
இன்துயில் எழுந்து, துணையொடு போகி, 5

முன்றில் சிறுநிறை நீர்கண்டு உண்ணும்
புன்புலம் தழீஇய பொறைமுதற் சிறுகுடித்,
தினைக்கள் உண்ட தெறிகோல் மறவர்,
விதைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பையும் புல்வாய் கெண்டும் 10

காமர் புறவி னதுவே-காமம்
நம்மினும் தான்தலை மயங்கிய
அம்மா அரிவை உறைவின் ஊரே.

காமத்தினாலே நம்மினும் பெரிதும் மயக்கமுற்றிருக்கும், அழகிய மாமைநிறமுடைய நம் தலைவியானவள் வாழ்ந் திருக்கின்ற இனிய ஊரானது,

சிறிய இலைகளையுடைய நெல்லியின் காயைக் கண்டாற் போலக் குறுகிய விழிபொருந்திய கண்களையும், கூரிய மயிரினையும் உடைய குறுமுயல்கள், வளைந்து கிடக்கும் வரகினது பருத்த பொதிகதிரினைத் தின்று, அழகிய குவிந்த செவியினவாகிய காய்களைக் கொண்ட கொடிகளுள்ளே புகுந்துகிடந்து உறங்கிப், பின்னர், தம் இனிய துயிலினின்றும் எழுந்து, தம் துணியினோடும் கூடிச்சென்று, முல்லை நிலங்கள் சூழ்ந்த குன்றின் அடிவாரத்திலேயுள்ள சிறிய குடியிருப்புக்களிலேயுள்ள, வீட்டு முற்றங்களின் சிறய சால்களிலேயுள்ள நீரைக் கண்டு பருகும், அத்தகைய தன்மையினையுடையதும்,

தினையிலேயிருந்து வடித்த கள்ளினையுண்ட, நாண் தெறித்து அம்பு எய்யும் மறவர்கள், வேகமாக இழுத்துக் கட்டிய வில்லினராகச் சென்று வேட்டையாடி வந்து, முல்லை நிலத்துத், தோட்டத்திலே தாம் கொணர்ந்த மானினை அறுத்துத் தின்றுகொண்டிருப்பதுமான, அழகிய காட்டினிடத்தது ஆகும். (அவ்விடத்தினை நோக்கி நின் தேரினை விரையச் செலுத்துக என்பது கருத்து).

என்று, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 2. கூரலம் குறுமுயல் - கூர்மையான மயிரினையுடைய குறுமுயல்கள். 3. முடந்தை - வளைந்த, வீங்குபிள் - பருத்த பொதி கதிர். வீங்குதல் - பருத்தல். 4 குடந்தையம் - செவி குவிந்த அழகிய காதுகள். 6. சிறு நிறை சிறிய சால், 9. விசைத்த வில் நாண் பூட்டிய வில் 10. படப்பை -