பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/373

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

அகநானூறு - மணிமிடை பவளம்


வழி. 5. வினை வலித்த - வினையிலே உறுதிகொண்ட 7 பிணி பிணிப்பு. 8. மடத் தகுவி - மடமையான தகுதியினை உடையவள். 13. அசைஇ - தங்கி. படுதொறும் ஒலிக்குந் தோறும் பரவி, தெய்வத்தைப் போற்றி.

விளக்கம்: “மனமே! அச்சமுடைய வழியிடையிலே என்னை இப்படி உறுதிஇழக்கச் செய்கின்றாயே! அவள் என்ன ஆவாளோ? அணைத்த கைகளின் பிணிப்பு நெகிழினும் வருந்தும் அத்தகைய இயல்பினளாயிற்றே!” என, அவளை நினைந்து வருந்துகின்றான் அவன்.

பாடபேதம்: 3 நிரை நிலை நடுகல்

290. நீலம் பொன்னாயிற்றே!

பாடியவர்: நக்கீரர். திணை: நெய்தல். துறை: இரவுக்குறிக் கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லு வாளாய்த் தலைமகள் சொல்லியது. சிறப்பு: விறற்போர்க் குட்டுவனின் தொண்டி நகரின் வளம் பற்றிய செய்தி.

(தன்னுடைய காதலனைச் சிறிது பிரிந்திருக்கவும் இயலாத காதற் பெருக்குடையவள் தலைவி. இரவுக்குறியிடத்தே, அவன் வரக் காலந்தாழ்க்கவும் அவள் மனம் வருந்தினாள். வின், அவன் வந்து சிறைப்புறமாக இருப்பவும், அவள் தன் தோழிக்குச் சொல்லுபவளேபோல, அவன் கேட்குமாறு தன் நிலையினைக் கூறுகின்றாள்.)

         குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
         இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய
         கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர்
         நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென,
         அல்குகு பொழுதின் மெல்குஇரை மிசையாது, 5

         பைதல் பிள்ளை தழிஇ, ஒய்யென,
         அம்கண் பெண்ணை அன்புற நரலும்
         சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன்.
         கழிசேர் புன்னை அழிபூங் கானல்,
         தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் 10

         மணவா முன்னும் எவனோ, தோழி?
         வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன்
         தென்திரைப் பரப்பின் தொண்டி முன்துறைக்,
         கரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல்
         மணிஏர் மாண்நலம் ஒரீஇப், 15
         
         பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே?