பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

அகநானூறு - மணிமிடை பவளம்



சொற்பொருள்: 4.கயம் - குளம்.7. ஒதுங்கிய நடந்து சென்ற. 9. நிரம்பா-செல்லத் தொலையாத 10. இருஞ்சிறை - பெரிய சிறகு 13. உவலை - தழை 17. தாஅம் - பரவிக் கிடக்கும். 23. இரும்பல் - கரிய பலவாகிய,

விளக்கம்: கூந்தலின் இயல்பான மணம், புலத்திடமெங்கும் மலர்மணம்போல் எழுந்து பரவிற்று என்க. மான்கொம்புகள் முதலில் கழன்று வீழ்ந்து மீண்டும் முளைக்கும் இயல்பின; அதனையே மறுகொம்பு என்பர்.

292. செய்வது யாது தோழி!

பாடியவர்: கபிலர் திணை: குறிஞ்சி. துறை: வெறி அச்சுறீஇத், தலைமைகள் தோழிக்குச் சொல்லியது.

(தலைமகள் தலைமகனுடனே களவிலே உறவாடி வர, அதனால் அவள் மேனியின்கண் புதுமாற்றங்கள் தோன்றின. அவனுடன் கூடும் உறவு தடைபடவும் அவள் பொலிவிழந்தாள். உடல் நலிந்து வாடியும் சோர்ந்தாள். மகளின் நிலை கண்டு வருந்திய தாய், முருகனுக்கு வெறியாட்டயர்தலிலே ஈடுபட, அவள் தன் தோழியினிடம் இப்படிக் கூறுகின்றாள்.)

         கூறாய், செய்வது தோழி! வேறுஉணர்ந்து,
         அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென்முறிச்
         சிறுகுளகு அருந்து, தாய்மலை பெறா.அ,
         மறிகொலைப் படுத்தல் வேண்டி, வெறிபுரி
         ஏதில் வேலன் கோதை துயல்வரத் 5

         தூங்கும் ஆயின், அது உம் நானுவல்;
         இலங்குவளை நெகிழ்ந்த செல்லல்; புலம்படர்ந்து
         இரவின் மேயல் மரூஉம் யானைக்
         கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்,
         வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன் 10

         கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்
         உடுஉறு கணையின் போகிச் சாரல்
         வேங்கை விரிஇணர் சிதறித் தேன் சிதையூஉ,
         பலவின் பழத்துள் தங்கும்
         மலைகெழு நாடன் மணவாக் காலே! 15

தோழி! விளங்கும் நம்முடைய வளைகள் நெகிழ்தற்கு ஏதுவான நம் வருத்தத்தினை அன்னையும் கண்டனள். அது, வேறொன்றால் வந்ததெனவும் நினைந்தனள். பொருளைச் சொரிந்து மனம் சுழன்று வருந்தவும் செய்கின்றனள்.