பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 383


'ஆவூர்க் கிழார் மகனார் கண்ணனார் (202)'

ஆவூர்க் கிழார் மள்ளனாகனார் எனவும் பாடம் உரைக்கப்படும். ஆவூர்க் கிழார் இவர் தந்தை என்பதும், இவர் அவர் மகன் என்பதும் பெயரால் தெரிய வருகின்றது. ஆவூர்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என மற்றொருவர் கூறப்படுகின்றனர். அவர் பெயர் சிலவிடத்து ஆவூர் மூலங்கிழார் மகனார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் காலத்தவர் அவர். அதுகொண்டு இவரையும் அவர் உடன் பிறந்தாரெனவும், அக்காலத்தவர் எனவும் கொள்ளலாம். இந்நூலுள் வரும் பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. 'வேங்கைப் பூ சிதறுவதைக் கொல்லன் குருகூது மிதியுலை பிதிர்விற் பொங்கியதாக ' இவர் கூறுவது சுவையும் நுட்பமும் உடையதாகும்.

'ஆவூர் மூலங்கிழார் (156)'

‘ஆமூர்’ என்பதே 'ஆவூர்' என்றாயிற்று எனவும், அது சோழ நாட்டது எனவும் சிலர் உரைப்பர். ஆனால், குறும் பொறை என்னும் சேரநாட்டுக் குன்றத்துக்குக் கீழ்ப்பால் உள்ளது ஆமூர் என இந்நூலின் 159ஆவது பாடலுள் ஆமூர்க் கவுதமன் சாதேவனார் உரைப்பதனால், அவ்வூர் அந்நாட்டதே எனவும் கருதுவர். வேளாண் மரபினராகவும் மூல ஒரையிலே பிறந்தவராகவும் இவர் விளங்கினமையால் 'மூலங்கிழார்’ எனப்பட்டார். இவராற் பாடப்பெற்றோர், சோழன் குளமுள்ளத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கீரஞ் சாத்தன், மல்லிகிழான் காரி ஆதி, சோணாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் ஆகியோராவர். இவர் மகனே பெருந்தலைச் சாத்தனார் எனவும் கூறுவர். இவர் பாடல்களாக, அகம் புறம் ஆகிய நூல்களுள் மொத்தம் 19 செய்யுட்கள் காணப்படும். இந்நூலுள் வரும் பாடலிலே, ‘மருதநில மகளிர் நீர்த்துறைக்கண் தெய்வத்திற்குப் பலியிட்டு வழிபடும் வழக்கம்' இவராற் கூறப்பட்டிருக்கின்றது.

ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் (224)

ஆவூர்க் கிழார் மகனார் எனவும் சொல்லப்படுவர். இவர் பாடியனவாக அகத்துள் இரண்டு செய்யுட்களும், புறத்துள் ஆறு செய்யுட்களும் நற்றிணையுள் ஒன்றும் வழங்கும். குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் காலத்தவனான குமணனை அடைந்து, அவன், 'தலையைக் கொள்க’ என, அவன் தம்பியிடஞ் சென்று, 'வாள் தந்தனனே தலை எனக்கு ஈய’ எனச்