பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/414

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 399


பாணர் (122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276)

மணிமிடை பவளத்துள் ஒருவர் பாடியனவாகக் காணப்படும் பாடல்களுள் இவரதே மிகுதியாகும். இவர் வரலாறு மிகவும் விரிவானது. கபிலரின் நண்பர் இவர். செங்குட்டுவன்மீது பதிற்றுப்பத்துள் ஐந்தாம் பத்தினைப் பாடிப் பெரும் பரிசிலும், அவர் மகன் குட்டுவன் சேரலையும் பெற்றவர். இவர் செய்யுட்களுள் அரசர், அவ்ர் நாடு, அவர் சிறப்பு முதலிய பல செய்திகள் காணப்படும். நற்றிணையுள் 12, குறுந்தொகையுள் 15, ஐந்தாம் பத்து, அகத்துள் 33, புறத்துள் 12, ஆகியவை இவர் பாடியன.

பாலை பாடிய பெருங் கடுங்கோ (155, 185, 223, 251, 267,291)

சேரவரசர் குடியிலே தோன்றியவன், பாலைத் திணைச் செய்யுட்கள் பாடுவதில் சிறந்தவனாயிருந்தமை பற்றிப், பாலை பாடிய என்னும் அடை மொழியோடு குறிப்பிடப்படுவான் ஆயினன். பேய்மகள் இளவெயினி என்னும் புலவர் இவனைப் புறநானூற்று 1ஆவது செய்யுளிலே பாடியுள்ளனர். அதன் கண், ‘விண் பொருபுகழ் விறல் வஞ்சி, பாடல் சான்ற விறல் வேந்தனும்மே' என இவன் குறிப்பிடப்பெற்றதுடன், இவனுடைய வள்ளன்மையும் சிறந்ததாகப் பேசப்பட்டிருப்ப தனைக் காணலாம். அதனால், இவனை அரசனாயிருந்தவன் என்றே கருதுதல் பொருந்தும். இவன் பாடியவாகச் சங்கத் தொகை நூற்களுள்ளே காணப்பெறுபவை அகம், நற்றிணை ஆகியவற்றுள் 23 செய்யுட்களும், கலித்தொகையுள் பாலைக்கலியும் ஆகும். இவன் பாடிய புறநானூற்று 282ஆவது செய்யுள் இவனது உயரிய உள்ளப் பண்பினைக் காட்டுவதாகும். தனக்காகப் போரிலே உடல் சிதைத்து வீழ்ந்த ஒரு வீரனின் தியாகத்தைச் 'சேண் விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாயுளானே’ என இவன் போற்றியுள்ளான். பாலைக் கலியினுள்ளும், இவன் ‘கிழவர் இன்னோர் என்னாது, பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்பு உறையும் ('கலி', 21)' எனப் பொருளின் நிலையாத தன்மையினையும், 'ஆள்பவர் கலக்குறு அலை பெற்ற நாடு போல்' என, ஆள்பவர் நாடாள வேண்டிய மரபு பற்றியும் பலவாறு கூறியுள்ளான். இவற்றால், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என வழங்கும், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனின் மூத்த மகனே இவன் எனவும் கருதுவர். அரிசில் கிழாருக்கு அரசு கட்டிலை அளித்தத் தகுதியையும், மோசி கீரனாருக்கு முரசு