பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/432

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 417


பெயர்க் கரிகால்' என 14 ஆவது செய்யுளுள் நக்கீரர் இவனைப் போற்றுகின்றனர். வெண்ணிவாயில் என்னுமிடத்தில் பதினொரு வேளிரோடு இருபெருவேந்தரும் தோற்று அழிய இவன் வென்ற சிறப்பைப் பரணர் 249ஆவது செய்யுளில் குறிப்பிடுகின்றனர். காவிரிக்குக் கரைகட்டியவன் என்ற பெரும்புகழும் இவனுக்கு உண்டு.


கழுவுள் (135)

இவன் ஒரு குறுநிலத் தலைவன். இவனுடைய ஊர் காமூர் என்பதாகும். இவனைப் பதினான்கு வேளிர்களும் ஒன்றுகூடி முற்றுகையிட்டு அழித்த செய்தியை இந்நூற் செய்யுளுள் பரணர் பெருமான் கூறுகின்றனர். அதனால், இவனைப் பரணரோடு ஒட்டிய காலத்தவன் எனலாம். இவனைத் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அடக்கிய செய்தியைப் பதிற்றுப்பத்துக் கூறும். எனினும், இவன் மீண்டும் தலை தூக்கவும் பதினான்கு வேளிர்களும் ஒன்றுகூடி முற்றுகையிட்டு இவனை அழித்தனர் என்று கருதலாம், இவனை ஆயர்குடித் தலைவன் எனவும் சிலர் கருதுவர்.

களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் (199)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிக் கோமான் மகள் ஈன்ற மக்கள் இருவருள் இவனும் ஒருவன். மற்றையோன் சேரமான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆவன். இவன் யாதோவொரு கொள்கை பற்றிக் களங்காய்க் கண்ணியும் நார்முடியும் அணிவதாகச் சூளுற்று இருந்த சிறப்புப்பற்றி, இப்பெயர் பெற்றனன் ஆகலாம். இச் செய்யுளுள், இவன் பெற்ற வெற்றிச் சிறப்பையும், சேரர்களின் இழந்த நாட்டை இவன் இப்போரினாலே மீட்டுத் தந்த பெருமிதத்தையும் கல்லாடனார் குறிப்பிடுகின்றனர்.


காரி (209)

மலையமான் திருமுடிக்காரி என்பவன் இவனே. இவன் திருக்கோவலூரிலிருந்து அரசியற்றியவன். சேரர்க்குத் துணையாகக் கொல்லிமலைக்கு உரியவனாகிய வல்வில் ஓரியைக் கொன்று, அந்த நாட்டை அவர்களுக்கு அளித்தவன். புலவோர் போற்றும் பெருவள்ளலாகத் திகழ்ந்த இவன், மழவர் கோமான், அதியமான் நெடுமான் அஞ்சியுடனும், சோழனுடனும் பகை கொண்டிருந்தான். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் சோழன் இவனைக் கொன்றதுடன், இவன் மன்னனை யானைக் காலிலிட்டுக் கொல்ல