பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/435

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

அகநானூறு - மணிமிடை பவளம்


மருள அங்கே விற் பொறித்ததும், இவனே. நன்னகர் மாந்தை முற்றத்துப் பகைவர் கொணர்ந்து நிறை குவிக்கவும் வாழ்ந்தவன் இவன் என மாமூலனார் குறிப்பிடுகின்றனர். இவனுடைய சிறப்புக்களை எல்லாம் நோக்க, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே எனலாம்.

ஞிமிலி (142, 148, 182, 208)

நன்னனுடைய பாழிப்பறம்பிலே வேளிர்கள் ஓம்பினராக வைத்த.பெருஞ்செல்வத்தைப் பேய்க்கூடு முதலிய கருவிகளுடன் காத்து வந்தவன். கோசர் குலத்தவனான இவன், புள்ளிற்கு ஏமமாகிய அதிகனைக் கொன்றவன் எனப் பரணர் 142ஆவது செய்யுளுட் கூறுவர், ‘கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் இவனொடு பொருது களம்பட்டனன் என 148, 181, 208 - ஆம் செய்யுட்களிலும் பரணர் குறிப்பிடுகின்றனர். வல்லோனாகிய அதிகனைக் கொன்ற இவனது வெற்றிச்செயல் பலகாற் சொல்லிப் போற்றுஞ் சிறப்பினதாயிற்று எனலாம்.

தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் (175, 209)

செழியன் என்னும் பகுதியிற் காணப்பெற்ற செய்திகளும் இவனைப் பற்றியனவேயாதலால், அதனையும் காணவும், இவன் மிகவும் புகழோடு விளங்கியவன். இவனுடைய தலையாலங்கானத்துப் பெருவெற்றியினை 175 - ஆவது செய்யுளில் ஆலம்பேரிச் சாத்தனாரும், 209 - ஆவது செய்யுளில் கல்லாடனாரும் புகழ்ந்துள்ளனர். மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை ஆகிய பத்துப்பாட்டு நூல்களுக்குப் பாட்டுடைத் தலைவன் இவன். மாங்குடி மருதனார் இவனாற் பெரிதும் மதிக்கப் பெற்றவர். இடைக் குன்றுர்கிழார், கல்லாடனார், குறுங்கோழியூர்க் கிழார், குடபுலவியனார் முதலாய பலராற் பாராட்டப் பெற்றவன் இவன்.

தித்தன்(22, 152, 226)

உறந்தைப பதியிருந்து அரசியற்றிய சோழருள் இவனும் ஒருவனாவன். தித்தன் எனவும், தித்தன் வெளியன் எனவும் இவன் பெயர் வழங்கும். ‘நொச்சிவேலித் தித்தன் உறந்தை’ என இவனூரையும் (122), இவனோடு பொருதுதற்கு வலிமிகு முன்பிற் பாணனோடும் வந்த கட்டி, யென்பான் அஞ்சி ஒடிய செய்தியையும் (226), இவனுக்குரிய கானலம் பெருந்துறையின் வளத்தினையும் (152) பரணர் பாடியுள்ளனர்.