பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 41



நின்னோடு நெடுநாளாகப் பிரியேன் என்றுதெளிவித்து வந்த நல்ல மலைநாடனாகிய நம் தலைவர், குறியிடத்துவருகின்ற நள்ளிரவில், குன்றின் உச்சியிலே, வழி தெரியாதவாறு தாழ்ந்த அணுகவரிய மிக்க இருளிலே, தன் முடியிலுள்ள சிறந்த மணியைத் தான் மேய்தல் காரணமாக உமிழ்ந்த நாகமானது, ,கொழுமையான மடலையுடைய காந்தளின் புதுப் பூவை நுகரும் நல்ல நிறத்தைக் கொண்டதும்பியைத், தன் திருமணி கொல்லோ என்று கருதி மயங்கும், கடத்தற்கரிய வெடிப்புக்களால் இன்னாமையையுடைய நீண்ட வழியை, என் நெஞ்சு நினையும்; எனறு,

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லு வாளாய்த், தலைமகள் சொன்னாள் என்று கொள்க.

சொற்பொருள் : 1. இகுளை தோழி.2. தெண்பனி - தெளிந்த நீர், 3. செல்லற்கு - துன்பத்திற்கு 4 கடுத்தனளாகி - ஐயுற்றனளாகி 5.வெறி-வெறிநாற்றம்.6.உடலுநர்-பகைத்தவர்.கடந்த-வென்று கடந்த சிமை - மலையுச்சி. 10. உருகெழு உட்குப் பொருந்திய, முருகு - முருகன். 12 அல்கலும் - இரவு முழுவதும், 14 தெளித்த தெளிவித்து வந்த 16 துன்னரும் - அணுகுதற்கரிய, 19. நன்னிறம் - நல்ல நிறத்தையுடைய.

உள்ளுறை : திருமணியுமிழ்ந்த நாகம், காந்தளின் புதுப்பூவை நுகர்ந்ததனால், நன்னிறம் பெற்றதும்பியைக் கண்டு, தன் மணியோவென ஐயுற்று மயங்குவது போலத் தலைமகனோடு இன்பம் நுகர்ந்ததனாற் பெற்ற புதுச்செவ்வியையுடைய என்னைக் கண்டு, முதுமை காரணமாக அறிவிழந்த அன்னை, மயங்காநின்றாள் என்றனள்.

மேற்கோள்: ‘கட்டினும் கழங்கினும் வெறியென விருவரும் ஒட்டிய திறத்தாற் செய்தி என்ற, களவலராயினும் என்னும் களவியற் சூத்திரப் பகுதிக்கு உதாரணமாகக் கொண்டு, இதன்கண், கட்டென்றாதல் கழங்கென்றாதல் விதந்து கூறாமையின், இரண்டும் ஒருங்கு வந்தன என்றும்,

'பொழுதும் ஆறும்' எனனும் பொருளியற் சூத்திரத்து ‘அன்னவை பிறவும் என்னும் பகுதியில், கடம்பும் களிறும். ஆதல் நன்றே என்பது, தலைவற்கு வெறியாட்டு உணர்த்தியது என்றும் நச்சினார்க்கினியர் கூறினர்.

பாடபேதங்கள்: 1. பாடித் தொடங்கும். 13 - 13. டல்கலும் பாடினளாதல் கைக்கொண்டாடினள் ஆஅதல் நன்றோ வன்றே நீடு.