பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அகநானூறு - மணிமிடை பவளம்


கூர்மையான முனை. 5. கோதை பெய் வனப்பு இழந்த மகளிர் தம் காதலரைப்பிரிந்த காலத்துக் கூந்தலுக்குக் கோதையும் சூடிப் புனையார் ஆதலின், அவ் வனப்பு இழந்த என்றான். 6. அருள் கண்மாறல் - அருள்தலாகிய கண்ணோட்டம் மாறல்: அருளும் கண்ணோட்டமும் மாறல் எனினும் பொருந்தும். 6. அந்தில் - அசை 9. பனிபடு நறுந்தார் - புதுப் பூக்களால் கட்டப்பட்டதால் தேன் சொட்டிக் கொண்டிருக்கும் நறுமணமுள்ள தாரும் ஆம். 1. விசும்பின் ஏறு இடிஏறு. 12. மாறு எழுந்து மாறுகொண்டு சினந்து எழுந்தும் ஆம். சிலைக்கும் - ஒலி முழங்கும்.15. குவிமுகம் - குவிந்திருக்கும் முனை. 16 மான் அடி - குதிரைக் குளம்புகளின் தடம்.17 வான மீன் - இங்கே, செவ்வொளி பரப்பும் ஆதிரை மீன்.

விளக்கம்: ‘கண்மாறல்’ என்பது, விழித்தகண் இமைக்கும் அளவிலே மறைதல் என்றார் மதுரைக்காஞ்சி உரையில் நச்சினார்க்கினியர் - (மதுரை. அடி. 64). ஒர்த்து’ - உன்ன நிமித்தமும் புள்நிமித்தமும் விசாரித்து எனவும் கொள்வர்.

மேற்கோள்: இப் பாட்டினை, “வேந்தன் தலைவனாயின வாறும், தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதுதற்கு உரியாள் அரச வருணத்திற்றலைவியே என்பதும் உணர்க” என, ஏவன் மரபின் என்ற சூத்திரத்து உரையிலே நச்சினார்க்கினியரும்; ‘பொய்யே கோடல்’ என்ற துறைக்கு ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திர உரையிலே “வருதுமென்ற நாளும் பொய்த்தன; வரியேர் உண்கண் நீரும் நில்லா என்ற பகுதியைப் பேராசிரியரும் காட்டினர்.

பாடபேதங்கள்: 1. வருவேமென்ற 2. வரியேர் உண்கண். 14. கைய. 18 அமரொறுத்து அட்ட

145. அடித்த கை அழிவதாக!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. சிறப்பு: என்னி என்பவன் குறுக்கைப் பறந்தலையிலே திதியனை வென்று, அவன் காவல் மரமாகிய புன்னையை அழித்த செய்தி.

(அருமையாக வளர்த்த மகள், இற்செறிப்பைக் கடந்து தன் காதலனுடன் உடன் போக்கிலே சென்றுவிட்டாள். அவளை வளர்த்த அருமையும், தான் இற்செறித்தபோது முதுகிலே அடித்த அடியையும் பொருட்படுத்தாது நின்ற மகளின் நிலைமையையும் நினைத்துக் கொள்ளுகிறாள் தாய். அப்படி அவளை அடித்த கையை வெட்டினால்தான் என்ன?’ என்று நொந்து கொள்ளுகிறாள்.)