பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அகநானூறு - மணிமிடை பவளம்



உள்ளுறை : பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்தவள் போலச் சொன்னாள்: ஆனால், வழியின் கடுமையைக் கூறிய வனதனால் அதனையும் மறுத்தாள் என்க.

தினையினை நுகர்வதற்காக வருகின்ற களிறானது வலிய புலியைக் குத்தி அழித்துவிட்டு வந்து தினைப் புனத்திலே கவர்ந்து உண்ணும்; அதுபோலவே, நீ வரைந்து வருவதானால் அலர் உரைக்கும் கொடியோராகிய பெண்களின் வாயினை அடக்கித் தலைவியை மணந்து நுகர்ந்து இன்புறுவாய் என்கிறாள் தோழி.

விளக்கம்: “காணிய செல்லாக் கூகை என்ற சொற்கள், ஆய் எயினன் இறப்பவும், பறவைகள் அவனுக்கு நிழல் செய்ய, தான் சினமிக்கு அவனைக் காணச் செல்லாது போர் மரபு பிறழ்ந்த நன்னனையே குறிக்கும்’ என்று, இந்நுலின் 208 ஆவது பாட்டுடன் ஒப்பிட்டால் கருத இடந்தருகின்றது.

149. எளிதாகப் பெற்றாலும் வாரேன்!

பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு : சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகச் செய்தியும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங் குன்றத்து வளமும்,

(தன் நெஞ்சத்திலே பொருள்தேடி வருதல் வேண்டுமென்ற ஆர்வம் எழ, முன்னர்த், தான் அப்படிப் பிரிந்த காலத்திலே, தன் தலைவி அடைந்த வேதனை மிகுதியை மறவாத தலைவன், தான் வாரேன் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிப்போவதை நிறுத்தி விட்டான். அதுபற்றிக் கூறுவது இச்செய்யுள்)

        சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த,
        நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்.
        புல்லரை இருப்பைத் தொள்ளை முனையின்,
        பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
        அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5

        அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
        வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர்
        சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
        யவனர் தந்த வினைமாண் நன்கலம்
        பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 1O