பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அகநானூறு - மணிமிடை பவளம்



156. பிழைத்த தவறோ?

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். திணை: மருதம், துறை: தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி; தலைமகனை வரைவுகடாயது; இது மருதத்துக் களவு சிறப்பு: குறிஞ்சிக் குறவர் வேலனுக்கு வெறியாட்டு அயர்தலைப்போல, மருத நிலத்தார் நீர்த் துறைக்கண் உள்ள கடவுளுக்குப் பலியிட்டுப் போற்றி வேண்டுவது.

(களவிலே தன் காதலனோடு உறவாடிவந்தாள் ஒரு தலைவி. அதனால், அவள் மேனிபுதுப்பொலிவுபெறக் கண்ட தாய், மகள் பொய்கையாடலால் வந்த நீர்த்தெய்வக் குற்றம் போலும் எனக் கலங்கினாள். அத் தெய்வத்துக்குப் பலியிட்டு வழிபட்டும் தன் மகளின் நோய் தணியாதது கண்டு வருந்தினாள். இதனைத் தலைவனிடம் கூறி, விரைந்து மணந்துகொள்ளுமாறு தோழி வற்புறுத்துகிறாள்)

        முரண்டைச் செல்வர் புரவிச் சூட்டும்
        மூட்டுறு கவரி தூக்கி யன்ன
        செழுஞ்செய் நெல்லின் சேயுரிப் புனிற்றுக் கதிர்
        மூதா தின்றல் அஞ்சிக், காவலர்
        பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக் 5
        
        காஞ்சியின் அகத்துக், கரும்பருத்தி, யாக்கும்
        தீம்புனல் ஊர! திறவிதாகக்
        குவளை உண்கண் இவளும் யானும்
        கழனி ஆம்பல் முழுநெறிப் பைந்தழை
        காயா ஞாயிற் றாகத், தலைப்பெய. 10

        ‘பொய்தல் ஆடிப் பொலிக!’ என வந்து,
        நின்நகாப் பிழைத்த தவறோ-பெரும!
        கள்ளுங் கண்ணியும் கையுறை யாக
        நிலைக்கோட்டு வெள்ளை நாள்செவிக் கிடாஅய்
        நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஒச்சித், 15

        தணிமருங்கு அறியாள், யாய்அழ,
        மணிமருள் மேனி பொன்னிறம் கொளலே?

வெற்றி தியாகம் வீரம் ஆகியவற்றைக் குறிக்கும் மூவகை முரசங்களும் முழங்குதலையுடைய செல்வர்களான மன்னர்களின் குதிரைக்குச் சூட்டுகின்ற, மூட்டப் பெறுகின்ற கவரியைத் தூக்கி உயர்த்தினாற்போல, செழுமையான வயல்களிலே நெற்பயிர் கதிர்த்தலையுடைய சிவந்த பொதியினை ஈன்று விளங்கும். கன்றை ஈன்ற அணிமையையுடைய பசுக்கள்