பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அகநானூறு - மணிமிடை பவளம்


அமைந்த கொம்பு 15. உளப்பட - உள்ளத்துக் கருணை பிறக்குமாறும் ஆம். ஒச்சி - போற்றி, 17. மணி - செம்மணி, நீலமணியும் ஆம்.

முழுநெறிக் குவளை இதழ் ஒடிக்கப்படாத குவளை: இவ்வாறு கொள்வர் அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையினுள். -

உள்ளுறை பொருள்: நெற்கதிர் பழுதுபடாமற் காக்கச் செய்த செயல்களாற் கரும்பும் பாகலும் பகன்றையும் சிதைவுற்றது போலக், களவினை நீட்டிக்க நீ செய்யும் செயலாற் காந்தளும் ஆட்டுக்கிடாயும் சிதைந்தன என்றாள். விளைந்தபின் வரும் பயனை நினைந்து, இளங்கதிரைப் பசு தின்றலுக்கஞ்சி, அதற்குக் கரும்பருத்திக் கட்டிப் பயன் கொள்வரர் போல, பின்னே பெரும் பயன் தரும் களவினைக் கெடுத்துப் பயன்தராது செய்யும் அலருரைப்பார் வாயடங்க, நீ வரைந்து கொள்வாயாக என்றாள்.

மேற்கோள்: இப்பாட்டுத், திணை மயக்குறுதலும் கடி நிலையிலவே’ என்ற விதிபற்றி மருதத்துக் களவு ஆயிற்று எனக் காட்டினர் நச்சினார்கினியர். மோத்தையும் தகரும் என்னுஞ் சூத்திர உரையுள், நிலைக்கோட்டு வெள்ளை நால் செவிக்கிடா அய்’ என்ற அடியைக் காட்டி, ‘யாத்த’ என்பதனால், ‘கடா வென்பதனையும் பாட்டிற்குப் பெயராகக் கொள்க என்பார் பேராசிரியர்.

பாடபேதங்கள்: 3 - 4. சேயரிப் புனிற்றுக் கதிர் மூதாதின்றல் அஞ்சி - சிவந்த அரியினையுடைய இளங்கதிரைக் கிட்டுப் பசு தின்றலுக்கு அஞ்சி.9-10.கழுநீர்ஆம்பல் முழுநெறிப்பகைத்தழை காமர் ஞாயிற்றுறாகத் தலைப்பெய- செங்கழுநீர் ஆம்பல் என்ற இவற்றின் அகவிதழ் ஒடிக்கப்படாத முழுப் பூவின் தழைகளை ஞாயிற்றின் வெம்மைக்குப் பகையாகத் தலையிலே செருகி.12.நின் எதிர்ப்பட்டட 15. உலைத்துறைக் 16. தரமருந்தறி, தணிமருந்தறி

157. நெஞ்சு கொள்ளச் சொல்க!

பாடியவர்: வேம்பற்றுார்க் குமரனார். திணை: பாலை. துறை: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: பாவைகள் பெயலால் நெகிழ்ந்தும் வெயிலால் சுருங்கியும் போவது பற்றிய செய்தி.

(தலைவன், பிரிந்து பொருள் ஈட்டிவர விரும்பினான். அதனைத் தானே நேரிற் கூறி அவள் படும் வேதனையைக் காணும் மனத்துணிபு அவனிடம இல்லை. அதனால், அந்தப் பொறுப்பை அவளுடைய உயிர்த்தோழியிடம் ஒப்புவிக்கிறான். அவளும்