பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அகநானூறு -நித்திலக் கோவை



விளக்கம்: செலவு விருப்புறுதல் ஒழிகதில்' என்றது, அவனை இரவுக்குத் தங்கிபோமாறு விரும்பியதாம். அது அவனால் ஏலாதாகவே, அதனால் தன் காதலி உறுகின்ற துயருக்கு இரங்கி, அவன், அவளை மணந்து பிரிவாயது வாழ்தலைத் தன்னுள் நாடுவான்’ என்று அறிதல் வேண்டும்.

'பசுமீன் நொடுத்த வெண்ணெல்மாத் தயிர்மிதி மிதவை ஆர்த்துவம்' என்றது, கடலிற் சென்றார் திரும்பியதும், புது மீனை நெல்லுக்கு மாற்றி வந்துள்ளதும் உணர்த்தினதாம். இதனால், தலைவியின் தகப்பனும் தமையன்மாரும் இல்லிலே உள்ள குறிப்பும் பெறலால், அவன் இரவில் தங்கிச் செல்லல் முற்றவும் இயலாதென்பதனை மேலும் வலியுறுத்தியதுமாம்.

'வடவர் தந்த வான்கேழ் வட்டம்' வடபுலத்தார் கொணர்ந்த வெண்ணிற வட்டக்கல்; இது சந்தனம் அறைப் பதற்கு உகந்தது. 'வடமலைப் பிறந்த வான் கேழ்வட்டத்தைத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக’ எனச் சிலப்பதிகாரம் உரைப்பதும் காண்க.

மேற்கோள்: 'இதனுள், தனக்கும் புரவிக்குக் கொடுப்பன கூறித் தடுத்தவாறு காண்க' என, இச் செய்யுளை, 'நாற்றமும் தோற்றமும்’ என்னும் தொல்காப்பியக் களவியற் சூத்திர உரைக்கண், 'வேளாண் பெருநெறி வேண்டிய விடத்து' என்னும் பகுதிக்குக் காட்டி உரைப்பர், நச்சினார்க்கினியர்.

341. உய்யும் தன்மை இல்லை!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். திணை: பாலை, துறை: பிரிவின்கண் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

(தலைமகனைப் பிரிந்து, அந்தப் பிரிவின் வேதனைக்கு ஆற்றாதவளாகப் பெரிதும் வாட்டமுற்று மெலிந்து, துயருற்றிருக்கின்றனள் ஒரு தலைமகள். அவள்பாள் அன்புடைய தோழிக்கு அவளுடைய வருத்தமும் வாட்டமும் பெரிதும் கவலையைத் தருகின்றன. அவன் குறித்தபடியே வருவான்; அதுவரை ஆற்றியிருப்பாயாக’ என்று கூறித், தலைமகளுக்குத் தேறுதல் கூறுகின்றனள் அவள். அப்போது, தலைமகள், தன்னுடைய நிலையினைத் தெளிவுபடுத்துவாளாகத் தன் தோழிக்குக் கூறுகின்ற முறையிலே அமைந்தது இச்செய்யுள்.)

உய்தகை இன்றால் - தோழி - பைபயக்
கோங்கும் கொய்குழை உற்றன குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்குசினை விளிக்கும்