பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 97



நாடுஆர் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக்

கழைஅழி நீத்தம் சாஅய வழிநாள்
5


மழைகழிந் தன்ன மாக்கால் மயங்குஅறல்
பதவுமேயல் அருந்து துளங்குஇமில் நல்லேறு
மதவுடை நாகொடு அசைவீடப் பருகி
குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லினர்ப்

பொன்தகை நுண்தாது உறைப்பத் தொக்குஉடன்
10


குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும்
யாணர் வேனிலமன் இது
மாண்நலம் நுகரும் துணையுடை யோர்க்கே.

தோழி!

கோங்க மரங்களும் மெல்ல மெல்லக் கொய்யப்படும் இளந்தளிர்களைப் பெற்றுள்ளன. தேன் வழிகின்ற மாமரத்தின் உயரமான கிளையிலே இருந்தபடியாகக் குயிலும் கூவுகின்றது.

நாடெல்லாம் நீர்வளத்தினை நிறைக்கும் காவிரியின் கரையினைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளத்தின் ஒடக்கோலும் மறையும் அளவுக்கு விளங்கிய நீர்ப்பெருக்கம் வற்றிப்போகிய பிற்றை நாளிலே

மழை பெய்து கழிந்தாற் போலப் பெரிய வாய்க்கால்களிலே தங்கிய கலங்கலான நீரினை, அறுகம் புல்லாகிய உணவினை அருந்திவரும் அசையும் திமிலினைக் கொண்ட நல்ல எருதும், வலியுடைய தன் நாவினாலே தன் தளர்ச்சி போகும் படியாகக் குடித்துவிட்டுக், குறுகிய அடியினையுடைய காஞ்சிமரத்தின் மாலைபோன்ற மெல்லிய பூங்கொத்துக்களினின்றும் பொன்னின் தன்மையுடைய பூந்தாதுகள் தன்மீது உதிர்ந்து கொண்டிருக்கும்படியாக, ஒருங்கு தொகுதிப்பட்டுக் கூடிய நெடிதான மணல்மேட்டினிடத்தே கிடந்து உறங்கிக் கொண்டிருக்கும்.

இத்தகைய இந்தக் காலமானது, மாட்சியுடைய இன்ப நலத்தினை நுகருகின்ற துணையாயினோரைப் பக்கலிலே கொண்டிருப்போர்க்குப் புதுமகிழ்வு தருகின்ற வேனிற் பருவம் ஆகும். அதனால், நாம் அடைந்தது என்னவோ? (யாதும் இல்லையே? அதனால்) இனி, நாம் உயர்ந்து இருப்பதற்கான ஒருவகையே நமக்கு இல்லையாகும்!

சொற்பொருள்: 1. உய்தகை - உய்ந்திருக்கும் தன்மை; பிழைத்திருக்கும் நிலை, 2. கொய்குழை கொய்யப்படும் தளிர்; இளந்தளிர். 3. தேம்பாய் மா - தேன் சொரியும் மாமரம் மா