பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 101


343. நினைந்தனை தகுமோ?

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை: பாலை, துறை: தலைமகன் இடைச்சுரத்து மீளக்கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது.

(ஒரு தலைவன் தன் காதல் மனைவியோடு கழிபேரின் பத்தே திளைத்திருந்தவன். பொருளார்வம் முனைந்து எழுதலினாலே, பிரிதற்கு இயலாத அவளையும் பிரியத் துணிவுகொண்டான். அவளைப் பிரிந்து, கொடிய பாலைவழியினும் நெடுந்தொலைவு சென்று விட்டவன், இடையே தன் நெஞ்சத்துக் காதலியின் நினைவு மிகுதியாக எழ, அப்போது தன் நெஞ்சுடன் கூறி, அதனைத் தகைந்து மேற்செல்லுவதாக அமைந்தது இந்தச் செய்யுள் ஆகும்.)

வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
சில்சுணங்கு அணிந்த பல்பூண் மென்முலை
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து
மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்

புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
5


கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்துஅவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
கண்பொரி கவலைய கானத்து ஆங்கண்

நனந்தலை யாஅத்து அம்தளிர்ப் பெருஞ்சினை
10


இல்போல் நீழல் செல்வெயில் ஒழிமார்
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம்நிறை பண்டத்து பொறை அசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணைஆகி

உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று
15


உள்ளினை - வாழிஎன் நெஞ்சே - கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையின் பிரிந்த நீயே.

என்னுடைய நெஞ்சமே! நீ வாழ்வாயாக

கள்ளுண்ணலினாலே கொள்ளுகின்ற மகிழ்வினுங் காட்டில் மகிழ்ச்சி கொள்ளுவதற்கு ஏதுவாக விளங்கியவள்.

செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்களை உடையவள்; சிலவாகிய மொழிகளால் பொலிவுற்ற பவளம்