பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அகநானூறு -நித்திலக் கோவை


அவளிடத்தேயே சென்றது. அவளுடைய வாட்டமும் துயரமும் அவன் கண்ணெதிரே தோன்றுகின்றன. தன் தேர்ப் பாகனை விளித்துத் தேரினை விரைவாகச் செலுத்துவதற்கு அவன் கூறுவது என்னும், துறையமைந்த செய்யுள் இதுவாகும்.)

வளமழை பொழிந்த வால்நிறக் களரி
உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்
தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின்
வைஏர் வால்எயிற்று ஒள்துதல் மகளிர்

கைமாண் தோளி கடுப்பப் பையென
5


மயிலினம் பயிலும் மரம்பயில் கானம்
எல்லிடை அறாஅ அளவை வல்லே
கழல்ஒளி நாவின் தெண்மணி கறங்க
நிழல்ஒலிப் பன்ன நிமிர்பரிப் புரவி

வயக்குஉறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து
10


இயக்குமதி - வாழியோ கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்புஇன் காதலி நகைமுகம் பெறவே.

தேரை நடத்துதலிலே கைவன்மையுடைய பாகனே! வெண்ணிறம் பொருந்திய களர்நிலத்தையுடைய காட்டிலே வளமான மழையும் பொழிந்தது. வளைந்த அடிப்புறத்தினை யுடைய பிடாமரத்தின், தொகுதிப்பட்டு விளங்கிய அரும்புகள் வீசும் குளிர்ந்தகாற்று தம்பால் மோதுந்தோறும், இதழ் விரிந்து, நிலவொளி என்னுமாறுபோல ஒளியுடன் விளங்கி கொண்டு மிருக்கும், கூரிய அழகான வெண்மையான பற்களையும் ஒளிதங்கிய நெற்றியினையும் உடைய மகளிர்களின், ஒழுங்கு மாட்சிமைப்பட்டு விளங்கும் 'தோளி' என்னும் ஆடலைப்போல, மெல்லென, மயிலினங்கள் தோள்பெயர்த்து ஆடலுமாயின, மரங்கள் செறிந்த காட்டின் இயல்பும் இங்ஙணம் ஆகியது.

அதனால், பசலை படர்தலால் உற்ற துன்பம் வருத்த வருந்தியிருக்கும், விரும்புதற்கு இனியவளான நம் காதலியின், நகையோடும் கூடிய முகத்தினை, யாம் பெறுதல் வேண்டும்.

ஆகவே, இருள் இடைப்படா முன்பாகவே, கழல் ஒலிபோல முழக்கும் நாவினையுடைய தெளிந்த மணிகள் ஒலி முழங்க, நிழலின் தழைத்தலையொத்த நிமிர்ந்து செல்லும் குதிரைகளைக் கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தினாயாக, விளக்கமுறும் தேர்மொட்டு அழகுடன் விளங்குமாறு, தேரினை நீயும் விரைந்து

செலுத்துவாயாக.