பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அகநானூறு -நித்திலக் கோவை


தலைமகன் வினைமேற் கொண்டு தலைவியைப் பிரிந்து வேற்று நாடு செல்ல வேண்டியதாகின்றது. அதனை உணர்ந்த அவள், தானும் உடன்வருவதாகப் பிடிவாதம் செய்கின்றாள்.அவளுடைய மனநிலையினை அறிந்த அவனும், 'சில நாட்கள் சென்றபின் யாம் செல்வோம்’ எனக் கூறி, அவளையும் உடனழைத்துப் போவதுபோலக் காட்டித் தேற்றுகின்றான். ஆனால், வினையின் முதன்மை காரணமாக, அவன் அவளைத் தனித்திருக்கவிட்டுப் பிரிந்து சென்றுவிடுகின்றான். அப்போது, அவன் செயலைக் குறித்துத் தலைவி தன் தோழிக்குச் சொல்லுகின்ற தன்மையிலே அமைந்தது இச்செய்யுள்.)

'விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித் தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண்
நாம்செல விழைந்தன மாக 'ஓங்குபுகழ்க்
கான்அமர் செல்வி அருளலின் வெண்கால்

பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
5


துணங்குநுண் பனுவற் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழிற் குன்றத்துக்
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்

சின்னாள் கழிக! என்று முன்னாள்
10


நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு
திருந்துவேல் இளையர் சுரும்புன மலைமார்
மாமுறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப
உறைகழிந்து உலந்த பின்றைப் பொறைய

சிறுவெள் அருவித் துவலையின் மலர்ந்த
15


கருங்கால் துணவின் பெருஞ்சினை வான்பூச்
செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக்
காடுகவின் பெறுக - தோழி - ஆடுவளிக்கு
ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ்

கல்கண் சீக்கும் அத்தம்
2O

அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே.

தோழி!

வானம் மழையினைப் பொழிந்து, அதனால் காட்டின் வெம்மையும் நீங்கிப்போய்க், குளிர்ச்சியான நிலைமையினையும் அது அடைந்துள்ளமையினால், செல்வீராக எனக் கூறியவராக நாம் பலவாறான மாட்சியுடனும், அவனுடன் செல்வதற்கு விரும்பி யிருந்தோம். அவனையும் வேண்டினோம். அது காலை