பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 109


நும்மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் - நெடுந்தேர்
இழையணி யானைப் பழையன் மாறன்

மாடமலி மறுகின் கூடல் ஆங்கண்
2O

வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதின் மன்னர் ஊர்கொளக்
கோதை மார்பன் உவகையிற் பெரிதே.

25

குறுகப் பறக்கும் இயல்பினையுடைய கொக்குச் சேவலானது, மாரிக் காலத்திலே, இறைப்பின் மேலிடத்துச் சுதை பூசியுள்ள குளிர்ந்த இடத்தைப் போலத்தோன்றும், இறகினை உடையது. அது, வெள்ளியாலே ஆகிய வெண்மையான இதழினைப்போல விளங்கும் கயல்மீனைப் பெற நினைக்கும்.

கள்ளினை உண்ட உவகையினாலே ஆரவாரித்து மகிழ்பவர் உழவர்கள். காஞ்சிமரத்தின் குறிய கட்டைகளைக் குத்தி, இனிய சுவையினை உடைய மெல்லிய தண்டினைக் கொண்ட சிறந்த கரும்புக் கழிகளைப் பலவாக வைத்து அடைத்து, நெற் பயிரினையுடைய பெரிய வயலின் பசிய பள்ளங்களிலே நீரைத்தேக்கி, வலிய இடத்தினையுடைய வளைந்த அணையினை வருத்த முற்று உழவர்கள் அமைப்பர். அதன் மேலிருந்தபடியாக

வழியும் விரைந்த நீரினை நோக்கியபடியே, மெல்ல மெல்ல நடந்தபடியாகக், கொக்குச்சேவல் கயலை எதிர்நோக்கி இருக்கும். அத்தகைய பயன் பொருந்திய ஊருக்கு உரியவனே!

நீ, நின் பாணனோடும் கூடியவனாக, இழுத்துக் கட்டுதலையுடைய மார்ச்சனையமைந்த முழவின் கண்கள் அதிர்ந்து முழங்கிக்கொண்டிருக்க, நினக்கு மகிழ்ச்சி கொள்ளுதற்குரிய உரிமைச் சுற்றத்துடனே கள்ளுண்டு களித்தனை. எம்மனையிடத்து வாராயும் ஆயினை. இங்ஙனமாகி, நின் மனையாகிய பரத்தையின் இல்லினையும் சேர்ந்தனை. அப்போது-

அம் மனையிடத்தேயுள்ள குறிய வளையணிந்த இளையோளான நின் பரத்தையானவள், நெடிய தேரினையும் இழையணிந்த யானையினையும் உடைய பழையன் மாறன் என்பானை, மாடங்கள் மலிந்த தெருக்களைக்கொண்ட கூடலாகிய அவ்விடத்தே, வெள்ளம்போன்ற பெரும்படையுடன் வேற்றுப் புலத்தே போரிடக் கருதி வந்து தங்கியிருந்த கிள்ளிவளவன் என்பான், நல்ல போரினிடத்தே அழித்துக், கடிய செலவினை