பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 123


          கெடுநா மொழியலன் அன்பினன் என நீ
          வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் 10

          நல்ல காண் இனிக் - காதல் அம்தோழீஇ!-
          கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
          நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்
          தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
          எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் 15

          புதுவதுபுனைந்த திறத்தினும்
          வதுவை நாளினும்இனியனால் எமக்கே.

அன்புமிக்க அழகிய தோழியே ஆராய்ந்தால், நீதான் எத்துணை நல்லவள்.

பல சுற்றங்கட்குத் தலைவனாகிய அறியாமைகொண்ட ஆண் குரங்கு ஒன்று, வளைதல் மிகுந்த பலாமரத்தின் குடத்தினைப்போல விளங்கிய பெரிய பழத்தினைத் தன்பால் பொருந்தத் தழுவிக்கொண்டதாகித், தன் இனிய துணையான பெண் குரங்கினை அழைக்கும். அந்தக் காட்சி, மிகவும் ஒலி முழங்கும் அருவியினையுடைய கற்பாறைப் பக்கத்தே, ஆடுகின்ற மயிலொன்று தனக்கு முன்னே நிற்பதாகவும் நிகழ்ந்தது. அது, கூத்தர் விழாக் கொண்டாடும் பழைமையான ஊரினிடத்தே, விறலியின் பிறகே நிற்கின்ற முழவு இயம்பு வோனைப்போலத் தோற்றும், அத்தகைய நாட்டையுடையவன் நம் தலைவன்.

'அவன் நற்குடிப் பிறந்த பண்பினையும் உடையவன். தன்னுடன் கூடினாரைப் பிரியாத அன்பினையும் உடையவன். நாவால் கெடுதலான சொற்களைக் கூறுபவன் அல்லன். நம் பால் அன்புகொண்டவன்.” என வெல்லாம் நீ வலிமையுடன் அவனைப்பற்றி என்பாற்கூறிப், பொருத்தமுற என்னையும் கூட்டிவைத்தனை.

கடிய வேகத்தையுடைய குதிரைகள் பூண்டநெடிய தேரினை உடையவன் அஞ்சி. அவனுடைய தொன்மையான புகழை நிலைநிறுத்தியவனான, புகழ்சான்ற பாண்மகனானவன், வல்லிசைகளை வரையறுத்த இனிமைமிக்க இசைநூலின்கண், எண்ணு முறையெல்லாம் வழுவாது நிலைபெறுத்தி இயற்றிய பண்களினுள்ளும்,ரபுதுப்புதுத் திறன்களைக் காட்டியவனாகப் புனைந்த அத்திறத்தினைக் காட்டினும், என் காதலன், இவ்வதுவைநாளினும், எமக்கு இனியனாகவே உள்ளனன்!

சொற்பொருள்: 1. முடிவுமுதிர் வளைவு மிகுந்த முடவு முதல் எனவும் பாடம்; பொருள், வளைந்த அடிமரத்தை