பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 125


மேற்கோள்: 'தலைவனது பண்பினைத் தோழி கூறிய வாற்றால், தான் நிறுத்திக் கூறுதற்கண்ணும்' என்று உரைத்தவராக, இச்செய்யுளை, 'அவனறிவாற்ற வறியுமாகலின்' என்னும் தலைவிகூற்றில், நிறுத்தற்கண்ணும் என்னும் பகுதியிற் காட்டுவர், இளம்பூரணனார்.

353. நினைவாய் அல்லையோ!

பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்; அம்மள்ளனார் எனவும் பாடம் திணை: பாலை. துறை: முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருண்முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது.

(தன் அன்புறு மனைவியுடனே கூடியவனாக வாழ்ந்தனன் தலைவன் ஒருவன். அவன், பொருள் வேட்கையினனாக, முன்பொரு சமயத்துத் தன் மனைவியைப் பிரிந்துசென்று, பொருள் தேடிவந்து, பின்னர் அவளோடு இன்புற்றிருப்பவன். மீளவும், அவனுள்ளத்தே பொருளார்வம் எழ, அவன், முன்னர்ப் பிரிவினாலே தான் அடைந்த துயரினை எண்ணியவனாக, இவ்வாறு தனக்குள் கூறிக்கொள்ளுகின்றான்.)

          ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்
          கேளினி - வாழிய நெஞ்சே! நாளும்
          கனவுக்கழிந்த தனைய வாகி நனவின்
          நாளது செலவும் மூப்பினது வரவும்
          அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5

          இந்நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
          அமைஆடு அங்கழை தீண்டிக் கல்லென
          ஞெமைஇலை உதிர்த்த எரிவாய்க் கோடை
          நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்
          கடுவெயில் திருகிய வேனில்வெங் காட்டு 10

          உயங்குநடை மடப்பினை தழீஇய வயங்குபொறி
          அறுகோட்டு எழிற்கலை அறுகயம் நோக்கித்
          தெண்நீர் வேட்ட சிறுமையின் தழைமறந்து
          உண்நீர் இன்மையின் ஒல்குவன தளர
          மரம்நிழல் அற்ற இயவின் சுரனிறந்து 15

          உள்ளுவை அல்லையோ மற்றே - உள்ளிய
          விருந்துஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
          வருந்தி வருநர் ஓம்பித் தன்னெனத்