பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அகநானூறு - நித்திலக் கோவை


          தாதுதுகள் உதிர்த்த தாழைஅம் கூந்தல்
          வீழ்இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி 20

          மகிழ்அணி முறுவல் மாண்ட சேக்கை
          நம்மொடு நன்மொழி நவிலும்
          பொம்மல் ஒதிப் புனையிழை குணனே?

நெஞ்சமே நீ வாழ்வாயாக!

பொருள் ஈட்டிவருவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிப் பொருட்டாக, இனி நம்தலைவியைப் பிரிந்து பேர்தல் என்பதும் உளதாமோ? அங்ஙனம் உளதாகிப் பிரிவாயாயினும், இனி யான் கூறுவதனைக் கேட்பாயாக.

நாளும் பொருளீட்டிவரல் என்கிற கனவுகளிலேயே ஈடுபட்டுள்ள அத்தன்மையையே உடையை ஆயினாய். நனவிலே நாட்கள் சென்று கொண்டிருப்பதனையும், மூப்பு நாளுக்கு நாள் வந்து கொண்டிருப்பதனையும் அரிதாகப் பெறுதற்குரிய சிறப்பினையுடையதான காமத்தினது இயல்பினையும், இந்நிலையிலே நீ அறியமாட்டாய். ஆயினும், இதனைக்கேள்;

செவ்விதான நிலையிலேயுள்ள மூங்கிலின் அசைகின்ற தண்டினைத் தாக்கிக், கல்லெனும் ஒலியுடனே ஞெமை மரத்தின் இலைகளை வெப்பமிக்க கோடைக்காற்று உதிர்க்கும். நீண்ட வெண்மையான களர் நிலத்தின் புழுதியையும் முகந்து கொண்டதாக அது சுழன்றடிக்கும். கடுமையான வெயிலும் முறுகிய அவ் வேனிற்காலத்திலே, வெப்பம் மிகவுடையதான காட்டிலே, வருத்தமுற்ற நடையினையுடையதான தன் புள்ளிகளையும், அறல்பட்ட கொம்பினையும் உடைய அழகிய கலைமானானது, தெளிந்த நீரினை உண்ணற்கு விரும்பிய விருப்பத்தினாலே, தழை தின்னலையும் மறத்ததாகி, நீரற்றுக் கிடக்கின்ற கயத்தினை நோக்கியதாக, அங்கு உண்ணுதற்கான நீர் இல்லாததனைக் கண்டதும் மெலிந்து தளர்ச்சி கொள்ளும். மரங்களும் நிழலற்றுப்போய் விளங்கும், அத்தகைய வழியினையுடைய சுரத்தினைக் கடந்து-

எண்ணிய விருந்தினர் ஒழிதலைக் கண்டறியாத பெரிதான குளிர்ந்த பந்தரின் கண்ணே வழியிடையே வருத்தமுற்றவராக வருவாரைப் பேணுபவளும், குளிர்ச்சியாகத் தாழையின் தாதாகிய துகளை அப்பிய கூந்தலின் மெல்லிய பின்னலிலே விரும்பப்படும் பூவிதழ்களை வைத்துப் பின்னியவளாக, மகிழ்ச்சியின் அணியாகத் தோன்றுகின்ற முறுவலுடனே, மாண்புற்ற பள்ளியினிடத்தே, நம்முடனிருந்து, நம்முடன் நன்மை விளைக்கும் காதன்மொழிகளைப் பேசுகின்ற பொலிவு பெற்ற