பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அகநானூறு -நித்திலக் கோவை


இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்றலை மன்றங் காணின் வழிநாள்

அழுங்கன் மூதுர்க்கு இன்னா தாகும்;
25

அதுவே மறுவினம் மாலை யதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே?

தோழி! 'வறட்சி அடைந்த வயலைப்போல வாட்டமுற்று வருந்தித், துன்பம் மேன்மேலும் மிகுமாறு, பிரிந்து சென்றவரையே உளங்கொண்டு நினைதலை, மிகச் சிறிதாவது கைவிட்டிருப்போம்' என்கின்றனை.

கொடுப்பவர், கொடுத்துப் போகச் செய்த கூலியாகிய சிறிதளவு உணவுப் பொருளையும் பேணிக்காவாது, இடையறவின்றி உண்டு தீர்த்தவராக, மீளவும் பொருளினை விரும்பி வேற்றுர் நோக்கிச் செல்பவர்கள் கூத்தர்கள்.

நீரில் வாழ்வதான முதலை வாய் பிளந்தாற்போலத் தோற்றும், ஆரைக்கால்கள் வேயப்பெற்றதும், ஒலிக்கும் இடனுடையதுமான சக்கரங்களையுடைய வண்டிகளிலே அவர்கள் செல்வார்கள். 'எம் ஊர் இது' என்று யாதொரு ஊரையும் குறித்துச் சொல்வதன்றி, எல்லா ஊரையுமே தமதாகக் கொண்டு வாழும், துயரமற்ற வாழ்க்கையினர் அவர்கள்.

அவர்கள், சுரநெறியின் தொடக்கத்தே தம் வழிநடை வருத்தத்தை மரத்தடிகளில் தங்கிப் போக்கிக் கொள்வார்கள். இனிதாக ஒலித்தலையுடைய தெளிவான கிணைப்பறை ஒலிக்க அவர்கள் மகிழ்வோடு செல்வார்கள். குவிந்த கொத்துக்களையுடைய எருக்கம் பூக்களினாலே நெருக்கமாகத் தொடுத்துக் கட்டிய கண்ணிகள் ஆடவர்களின் தலையுச்சிகளிலே காட்சிக்கு இனிதாக விளங்கிக் கொண்டிருக்கும். ஒலியுடனே எழுகின்ற காட்டுத்தீயின் சுடர் ஒளியினைப்போல விளக்கமுற்றுத் தோன்றும். காட்டாவிரையின் பூக்களாலே தொடுத்த கோதைகள் மகளிரது அழகிய மார்பிடத்துப் பருத்த முலைகளின் மேலே கிடந்து, அசைந்து ஆடிக் கொண்டிருக்கும்.

செறிந்த நடையுடைய பிடியானையுடனே களிற்றியானை கூடிச் செல்வதுபோல, பெண்களும் ஆண்களுமாக அவர்கள் இணைந்து சேர்ந்து செல்வார்கள். அப்போது -

சிறிதும் பெரிதுமான துளைக்கருவிகளின் இசையுடனே கூடிக்கலந்து முழவுகளின் ஒலியும் இசைத்து எழுந்து கொண்டிருக்கும்; கார்வானத்து இடிமுழக்கினையொப்ப