பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அகநானூறு - நித்திலக் கோவை



துன்பமிக்க காட்டைக் கடந்து செல்வுழி, 'உள்ளிய விருந்து ஒழிவறியா... புனையிழை குணனே... உள்ளுவை அல்லையோ? என்றது, 'அதுகாலை, நீ அவ்வின்பத்தை நினைந்து மீளக் கருதுவாய் அல்லையோ?' என முன்னர்த் தன் உள்ளம் கொண்ட நினைவினைச் சுட்டிக் கூறினதாம்.

இதனால், அவன் தன் போக்கினை நிறுத்திக் கொண்டனன் என்பதும் அறியப்படும். 'உள்ளிய விருந்தொழிவு அறியாப் பெருந்தண் பந்தர் வருந்தி வருநர் ஓம்பி’ என்பது, அவன் பொருள்முற்றி வந்த வளமான வாழ்வினையுடையவன் என்பதனைக் காட்டுவதாம்.

354. பசப்பு எங்கே தங்கும்?

பாடியவர்: மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது.

(வேந்து வினைமுடித்து வெற்றிச் செருக்குடன் தன் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கின்ற தலைமகனிடத்தே, அவனுடன் தாமும் திரும்பி வந்து கொண்டிருப்போரான அவன் தோழர்கள், அவன் மீளவும் வீடு செல்வதனால் அவன் தலைவியின் துயரம் நீங்குவதைக் குறிப்பாராகச் சொல்லுகின்ற தன்மை அமைந்தது இச் செய்யுள்)

மதவலி யானை மறலிய பாசறை
இடிஉமிழ் முரசம் பொருகளத்து இயம்ப
வென்றுகொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு
கறவைப் பல்லினம் புறவுதொறு உகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து 5

இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடுநடைக் புரவி வழிவாய் ஓட
வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்
புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்துகள் அணிய 10


வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டுஉறை வதுகொல் தானே... மாண்ட
போதுஉறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திருதுதற் பசப்பே?

தலைவனே! வலிமையுள்ள யானைகள் மதமுடையவாய்ப் போரினை விரும்பி மாறுபட்டுக்கொண்டிருப்பது நம் அரசனின் பாசறை இடிபோன்று முழங்கும் வெற்றிமுரசம் போர்க்களத்தே