பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 129


ஒலிக்கும்படியாக நம் வேந்தனும் பகைவரைவென்று வெற்றிக் கொடியினையும் உயர்த்தனன்.

பலவாகிய கறவை மாடுகள் தத்தம் கன்றுகளோடும் கூடியவையாகக் காடெல்லாம் தாவிக்கொண்டு வருகின்றன. அவற்றை முறைப்படுத்துவாராகக் கோவலர்களும் தம் வாய்க் கண்ணே குழலினை வைத்து ஊதுவாராயினர். நின் ஏவலர்கள் மிக விரைந்து செல்வாராக முற்படச் செல்லுகின்றனர். விரிந்த பிடரி மயிரினையும் கடுமையான செலவினையும் உடைய குதிரைகள் வழியினை மேற்கொண்டு ஓடிக்கொண்டிருக்க, நின் தேர்ப்பாகனும் அவற்றைக் கடிவாளத்தினை வலிந்து பிடித்துச் செலுத்துகின்றனன். புலவர்களின் புகழ்ச்சிக்கு உரிய விழுப்புண்களைக் கொண்ட நின்னுடைய அழகிய தாரணிந்த மார்பிடத்தே, குளிர்ந்த மணம் கமழும் சாந்தினோடு, நுண்மையான மணப்பொடிகளும் அழகு செய்கின்றன. வெற்றி கொண்ட மகிழ்ச்சியுடனே நீ நின் மனைக்கண் புகுதலையும் விரும்பினாய், ஆயின்,

மாட்சிகொண்ட நீலமலரின் இதழோடு மாறுபட்டமை யுண்ட கண்ணினளான தீதற்றவளாகிய நின் தலைவியின் அழகிய நெற்றியிடத்தைக் கைக்கொண்டிருந்த பசலையானது, இனி எங்குச் சென்று தங்கி வாழுமோ? (அதனை உரைப்பாயாக)

சொற்பொருள்: 1. மதவலியானை - மதமும் வலிமையும் கொண்ட போர்க்களிறுகள். மறலிய மாறுபாடு கொண்டுள்ள. 2. இடியுமிழ் இடியின் குரலொத்து முழங்கும். 4. கறவை பாற்பசு புறவு - காடு. 5. வல்விரைந்து - மிக விரைந்து. 6. உளை - பிடரி மயிர். 8. வள்பு வார். வலியுறுப்ப வலிந்து பற்றிச் செலுத்த, குதிரைகள் கடிதாக ஒடுதலால் வாரை வலிந்துபற்றி அவற்றைச் செலுத்த வேண்டியதாயிற்று. புகழ் குறிக்கெண்ட புகழ்தலைக் குறியாகக் கொண்ட புகழ்தற்கான விழுப்புண் பெற்று விளங்கும் எனலும் ஆம், 9. பொலம் பொன்; அழகைக் குறித்தது. அகலம் - மார்பு. 13. போது - நீலமலரின் இதழ். 14. தீதிலாட்டி - குற்றமற்ற கற்பினள். இதன் எதிர்ச்சொல், 'தீவினையாட்டி' என வழங்கும்.

விளக்கம்: மதவலி யானை மறலிய பாசறை எனவே, வேந்தனின் படையாண்மை மிகுதியும் உரைத்ததாயிற்று. இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப, வென்றுகொடி எடுத்தனன் எனவே, மேற்கொண்ட வேந்துவினை நிறைவு எய்தியதும் உரைத்தாயிற்று.

'கறவைப் பல்லினம் புறவுதொறு உகள' என்றலின், நிறையாகப் பகைவரது பசுநிரை கைக்கொண்டமை உணர்த்தப்-