பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 131



பொன்நயந்து அருள்இலை யாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே

தோழி! மாமரங்களும் வளமையான தளிர்களை ஈன்றுள்ளன. குயில்களும் அவற்றின் கொம்புகளிலிருந்து மிக இனிதான குரலிற் பலகாற் கூவுகின்றன. முதிர்ந்த இலைகளைக் கழித்து, மலர்கள் இதழ்விரிந்து நிறைந்திருக்கும் பெருங் கிளைகளில், யாழிசைத்தலிலே வல்லான் ஒருவன் தடவி இசைக்கும் நரம்பினின்றும் இனிய இசைகொண்ட பாலைப்பண் எழுந்து ஒலித்தலைப்போல, வண்டினங்கள் முரலுகின்றன. தெளிந்த நீர்நிலையைச் சார்ந்த, பூந்தாதுகள் உதிர்ந்து கொண்டிருக்கும் குளிர்ச்சியான சோலையிலேயுள்ள, தூய்மையான மணல்மேட்டினிடத்துத் தங்கியிருந்து, காதலர்களாயினோர் தம்முடைய செழுமையான வீட்டினையும் மறந்திருக்கின்ற செவ்வியினை உடையதான, இளவேனிற் காலமும் வந்துள்ளது. ஆயின்-

விளங்கும் வளைகள் இடையறாது கழன்றுவீழும் நம் துன்பத்தை அவனுக்கு விளங்கக் காட்டி, யாமே எமக்குத் துணையாக, நீயோ பொருளினை விரும்பி அருளற்றனையாயினை. இத் தன்மையினை உடையையாதல் நின் தகுதிக்கு ஒத்ததன்று எனக் கூறி, அவனை வெறுத்தேமாக வருவோம். போவோம்; எழுவாயாக!

சொற்பொருள்: 1. வண்டளிர் - வளவிய தளிர். 3. மூதிலை - முதிர்ந்த இலை. 4. வள்ளளுயிர்ப் பாலை - இனிதாக இசைத்தலையுடைய பாலைப்பண். 1. புலத்தல் - வெறுத்தல்.

விளக்கம்: "இளவேனில் வந்தது என்பதனைக் கூறி, அதன் செவ்வி காதலரைத் தாதுகு தண்பொழில் அல்கிச் செழுமனை மறப்பிக்கும் தன்மையது என்பதனையும் காட்டி, அத்தகைய வேளையில், வளை நெகிழ்ந்த தன் துயரமும் புலப்படுத்தியவளாக, 'யாமே எமியும் ஆக, நீயே பொன் நயந்து அருளிலை யாகிய இன்னையாகுதல் ஒத்தன்று' எனப் புலந்து வருவோம்’ என்று உரைக்கின்றனள். அவளுடைய மனக்குமுறல் இதனாற் புலனாகும். 'நீயே பொன் நயந்து' என்றதனால், அவர்களிடத்து இயல்பாக அமைந்திருந்த வளமும் உணரப்படும்.

356. நின் குறிப்பு யாதோ?

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக்-