பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 3


நீரிடத்தேயிருந்து ஒலிசெய்கின்ற தேரைகளின் ஒலியைப்போலத் தாளம் அமைந்ததாகச் சில்லரிகள் சதா ஒலித்துக் கொண்டும் இருக்கும். இப்படிச் சிறிதான பல வாச்சிய ஒலிகளுடனே வழிநடந்து, பற்பல ஊர்களையும் நாடிச் செல்பவர்கள், அவர்கள்.

அவர்கள், ஒரூரிலே சென்று கூத்தாடிவிட்டு, மறுநாள் காலையிலே, தலையிலே சேர்த்துக்கட்டிய பல தொகையினவான வாச்சியங்களுடைய பையினராக, வேற்றுரை நாடிப் போகவும் புறப்பட்டுவிடுவார்கள். மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தரின் தன்மை இதுவாகும்.

அவர்கள் கூத்தாடிவிட்டுச் சென்றபின், பொலிவிழந்து கிடக்கும் மன்றத்தினைப் பிற்றைநாளிற் காணின், முந்நாளிலே ஆரவாரம் கொண்டதாக அவ்விடத்தே விளங்கிய மூதூர் மக்கட்குப் பெரிதும் துயரம் தருவதாகவே இருக்கும்.

அத்தகைய நிலையினையே, இம்மாலைக் காலத்தில் யாமும் அடைந்திருக்கின்றோம். அதனால், நம் காதலர் நம்முடன் கூடியிருந்த காலத்துச் செய்த காதற்செயலினை எல்லாம், நெடிதும் நினைத்து நினைத்துத் துயருறுதலன்றி, நம்மால் அவரை மறந்திருத்தலும் இயலுமோ?

சொற்பொருள் : 1. வறன் - வறட்சி; வளமிழந்து வாடிக் கிடக்கின்ற அவலநிலை. செய்யின் - விளை நிலத்தின் செய்தியின் எனவும் பாடம்.2.படர்-துன்பம்; அது மென்மேலும் காதலரைப் பற்றிப் படர்ந்து பெருகுதலாற் 'படர்’ என்றனர். உள்ளுபு நினைதல் - எண்ணி எண்ணி நினைந்திருத்தல்; இடையறாது அதே நினைவாயிருத்தலும் ஆம். 3. ஆன்றிகம் - அமைந்திருப்போம். 4. நல்குநர் - கொடுப்போர்; ஊர் மன்றிலே கூத்தியற்றியவருக்குக் கூலி கொடுத்து விடுவதற்கு உரிய பொறுப்பினர். சில்பதம் - சிறிதளவாக இருக்கும் உணவுப் பொருட்கள். 5.ஒடிவை இடையறவு. 6. ஆவித்தன்ன - வாய்ப் பிளந்தாற் போன்ற, 7. ஆரை - ஆரைக் கால்கள்; குடத்தையும் சக்கரத்து வளைவுகளையும் இணைக்கும் இணைப்புக்கள்.11.ததர் - நெருக்கமான, 13. முளரித்தீ - காட்டுத்தீ. 14. களரியாவிரை - காட்டாவிரை. 15. வனமுலை - பருத்த முலை. துயல்வர - அசைந்தாட 18. தெவிட்டல் - ஒலித்தல். 19. சீர் - தாளம். 24. புன்தலை - பொலிவிழந்த, 26 மருவினம் - அடைந்தனம்.

விளக்கம் : தலைவனைப் பிரிந்து வாடியிருக்கும் தலைவியின் நிலைமைக்கு, முன்னர் வளமுடனிருந்து கோடையால் வறட்சியுற்றுப் பொலிவிழந்து கிடக்கும்