பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அகநானூறு -நித்திலக் கோவை




364. நீந்தல் அரிது!

பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார். திணை : முல்லை. துறை : பருவம் கண்டுஅழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(தலைவன் ஒருவன் வேந்தனின் படைத்துணையாகத் தன் தலைவியைப் பிரிந்து வேற்று நாடு சென்றுள்ளனன். மீள்வதாகக் குறித்துச் சென்ற கார்காலம் வந்தும் அவனை வரக்காணாது தலைவி புலம்புகின்றனள். அவள், தன் வருத்தத்தைத் தோழியிடத்தே கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்.)

 புதையப் பாஅய்க் கால்வீழ்த்து
ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன

நீடிணர்க் கொன்றை கவிபெறக் காடுன்
5


சுடர்புரை தோன்றிப் புதல்தலைக் கொளாஅ முல்லை இல்லமொடு மலரக் கல்ல
பகுவாய்ப பைஞ்சுனை மாவுண மலிரக் கார்தொடங் கின்றே காலை காதலர்

வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை
1O


வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாதுசெய் வாங்கொல்? - தோழி - நோதகக்
கொலைகுறித் தன்ன மாலை
துணைதரு போழ்தின் நீத்தலோ அரிதே!

தோழி!

திசையனைத்தும் மறையப் பரவி மழையும் காலிறங்கிற்று. இடியேற்றினை உடைய பெருமழையும் சொரிந்தது. இதனாற் பள்ளங்கள்தோறும் ஆடுங்களத்தே ஒலிக்கின்ற பறையினைப் போல வரிகளையுடைய தேரையும் ஒலிக்கத் தொடங்கிற்று. சிவந்த பொன்னினாலே ஆகிய விளங்கும் அணிகளைத் தொங்கவிட்டாற் போன்ற, நெடிதான பூங்கொத்துக்களை உடைய கொன்றையும் அழகு பெற்றது. தோன்றிச்செடிகள் சுடர்விளக்குப் போன்ற பூக்களைத் தம்மிடத்தே கொண்டனவாகக் காடெங்கும் புதர்கள்தோறும் விளங்குகின்றன. முல்லையும் இல்லமும் மலர்ந்துள்ளன. விலங்கினம் உண்ணுமாறு நீரால் நிறைந்தது. இங்ஙனம், காலமும் கார் காலமாகத் தொடக்கம் பெற்றுள்ளது.