பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 173


இனிய குரலோடுங்கூடி, மிக்க துளிகளைப் பொருந்தியவையும் ஆயின. இங்ஙனமாக நல்ல பல பெயல்களைப்பெய்து கழிந்த, பூக்கள் மணங்கமழுகின்ற வைகறைப் போதிலே நம் தேரும் செல்வதாக!

மணல் செறிவுற்று உயர்ந்த களர்பட்டுத் தோன்றுகின்ற காட்டுவழியிலே, குறுகிய வயிற்றினைக்கொண்ட தம்பலப் பூச்சிகள், குறுகக்குறுக ஓடியவையாக, மணியுடனே கூடிய பவளத்தைப்போலக், காயாவின் அழகு மிகுந்த வாடற் பூவிடையே புகுந்து ஒளிந்து மறைவனவாயின. இத்தகைய கார்ப்பருவம் அழகு பெற்றுவிளங்கும், விருப்பம் பொருந்திய காலைப் பொழுதிலே, நம் தேரும் செல்வதாக!

பெரிய தோள்களையும் நுணுகிய இடையினையும் திருத்தமான அணிகளையும் உடையவள் நம் தலைவி. அவள், விருந்தினை எதிர்கொள்ளுமாறு நம் தேரும் விரைந்து செல்லுமாக!

சொற்பொருள்: 1. மாக்கடல் - பெருங்கடல், மாதிரம் - திசை 2. மலர்தலை உலகம் - அகன்ற இடத்தையுடைய உலகம். 3. பழங்கண் வருத்தம்; அது பொறையினாலே வந்தது, கொழும் பல் கொண்மு - வளவிய பலவாகிய மேகங்கள். 5. தாழ்ந்தபோல - மேனின்றும் நிலம் நோக்கி இறங்கி வருதலைப்போல,7.இடியும் முழக்கமும் இடித்தலும் குமுறலும்.10 பூநாறு வைகறை - பூக்கள் கமழ்கின்ற வைகறை, மண்வாடை கமழும் வைகறையும் ஆம். 12. குறுமோட்டு மூதாய் - குறுகிய வயிற்றினையுடைய தம்பலப் பூச்சி. 14. காயா அணிமிகு செம்மல் - அழகு மிகுந்த காயாவின் வாடற்பூ 15. காமர் காலை விருப்பம் பொருந்திய காலை வேளை, காமர் மாலை எனவும் பாடம்.

விளக்கம்: நிலம் மழைவரவால் மணம் பெற்றுக் கவினுற்றது போலத், தலைவியும் தன்வரவினால் கவினுறுவாள் என்பதனைக் குறிப்பாகப் புலப்படுத்தும் தலைவன், கார் வரவைக்கூறி நாமும் செல்வோம் என்கின்றனன்.

மழை மாரியாகச் சோவென்ற ஒலியுடனே பெய்யும் பெயலினை, வடியுறு நல்யாழ் நரம்பிசைத்தன்ன எனக் கூறும் நயத்தினையும், வாடிய காயாவின் பூக்களாகிய நீலச் செறிவினுள் குறுகுறு ஓடி மறையும் தம்பலப் பூச்சிகளின் தன்மையை, நீலமணியுடன் கூடிய பவளம் எனக் கூறும் நயத்தினையும் அறிந்து இன்புறுக

மேற்கோள்: 'தலைவன் தான் பெற்ற இன்பத்தைப் பாங்கற்குக் கூறியது' என்பதற்குச், 'செல்க தேரே நல்வலம்