பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 181



378 தோன்றலான் உள்ளேன்!

பாடியவர்: காவட்டனார். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது.

(தலைவனும் தலைவியும் களவிலே உறவாடி இன்புற்று வருகின்ற காலம். அவர்களின் உறவிலே ஐயுற்ற தாய், தலைவியை இற்செறிக்கவும் கருதி, அவளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறாள். இந்த நிலையிலே, இரவு வேளையில் யாரும் அறியாமற் சென்று தன் மனைக்கு அண்மையிலுள்ள குறித்த ஓர் இடத்தில், தலைவி முன்னேற்பாட்டின்படி தன் தோழியுடன் சென்று காத்திருக்கின்றாள். அப்போது, தலைவியின் துயருக்கு வருந்திய தோழியானவள், தலைவனைக் குறித்துப் பழி கூறுவாளாகப் பேச்செடுக்கத், தலைவி, தன்தோழிக்குக் கூறுகின்ற முறையிலே அமைந்தது இச் செய்யுள்)

'நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள
வங்கூழ் ஆட்டிய அம்குழை வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக் காமர்
பீலி ஆய்மயில் தோகை 5

வேறுவேறு இனத்த வரைவாழ் வருடைக்
கோடுமுற்று இளந்தகர் பாடுவிறந்து இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென்சீர் ஒசிய விசும்புஉகந்து
இருங்கண் ஆடுஅமைத் தயங்க இருக்கும் 10

பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படர்கூர் மாலையும் 15

அனைத்தும் அடூஉநன்று நலிய உஞுற்றி
யாங்ஙனம் வாழ்தி?’ என்றி - தோழி!
நீங்கா வஞ்சினம் செய்தநத் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே - அவர் நாட்டு
அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய 2O

கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப்
பாடின் அருவி சூடி
வான்தோய் சிமையம் தோன்ற லானே.