பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 183



சொற்பொருள்: 1. நிதியம் - வளமான செல்வம், வரைப்பின் - மனையகத்து, 2. வதுவை மகளிர் - மணங்கொண்ட மங்கல மகளிர், 3, வங்கூழ் - காற்று. 6 வரைவாழ் வருடை - வரையிடத்தே வாழ்கின்ற வருடை ஒருவகை விலங்கு எண்கால் வருடை' என்பர் பேராசிரியர். 7. தகர் - கடா. 8. வயிர் கொம்பு.12. உடன்ற - மாறுபட்ட அமரா நோக்கம் - பொருந்தாத பார்வை. 13. வடந்தை வடகாற்று. 15. படர்கூர்மாலை - துன்பம் மிகுந்த மாலை 16. அடுஉ நின்று - தாக்கி நிலைபெற்று. 20 அள்ளிலைப் பலா - நெருங்கிய இலைகளையுடைய பலாமரம்.

விளக்கம்: வருடைகள் தம்முள் மோதுகின்ற கொம்பொலிக்கு மயில் அஞ்சிச்சென்று மூங்கிலின்கண் இருக்கும் நாடன் என்றனளாகவே, அங்ஙனமே, தலைவனின் பிரிதலாகிய கொடுமையால் தானும் நடுங்கித் தன் இல்லிலிருந்து வாடியதனைக் கூறினள் என்க.

பிரிவின் துயரம் அன்னை ஐயுற்று நோக்குங்கால் மறைத்து வாழ வேண்டிய துயரம், மாலையின் வரவினாலே கொள்ளும் காமவேட்கை மிகுதியினால் ஆகிய துயரம் ஆகிய அனைத்தும், அவனுடைய , 'வான்தோய் சிமையம் தோன்றலான்’ ஆற்றியிருக்க இயல்வதாயிற்று என்கின்றாள் தலைவி.

'கல்லா மந்தி கடுவனொடு உகளும்’ எனவே, அதனைக் காணும் அவனும் தன் நினைவு தோன்ற வாராதிரான் என்பதும், 'கடுந்திரல் அணங்கின் நெடும்பெருங்குன்றத்து’ எனவே, 'அவன் சூழினைப் பொய்க்கமாட்டான்' என்பதும் உணரற்பாலதாம்.

379. இரங்குவை அல்லையோ!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: 'பாலை, துறை: முன்னொரு காலத்துப் பொருண்முற்றி வந்த தலைமகன், பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

(பொருள் தேடிவருதலின் பொருட்டாக, முன்பொரு முறை தன் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு சென்று பொருளிட்டி வந்து, அவளுடன் இன்புற்றிருக்கும் தலைவன் தனக்குள் தன் பழைய அநுபவங்களைக் கூறியவனாக, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டனன். இந்தத் துறையில் அமைந்த செய்யுள் இது.)

நந்நயந்து உறைவி தொன்னலம் அழியத்
தெருள மையின் தீதொடு கெழீஇ
அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள்புரிந்து