பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 193


சால் என்க. 10. தயங்க - அசைய 1. தாய் முகம் நோக்கி - தாயன்பு முகத்தில் விளங்குமாறு நோக்கி; தாயின் முகத்தை நோக்கிய படியும் ஆம். 11. மடக் கண்ணள் - மடப்பம் வெளிப்படும் கண்களையுடையவள்.

விளக்கம்: 'சேரி' என்பது, ஊரின் பகுதியைக் குறிக்கும். மகளைப் பிரிந்த தாய், தலைவியால் நீருற்றி வளர்க்கப்பெற்ற வயலைக் கொடியிடத்திலே சென்று, அவள் பிரிந்து தலைவனுடன் உடன்போக்கிலே சென்ற செய்தியைக் குறித்து, அதனிடத்துக் கூறி இவ்வாறு புலம்புகின்றனள்.

384. விருந்தோம்பும் சிறப்பு!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகன் வரவு கண்டு உழையர் சொல்லியது.

(வேந்தனின் ஏவலுக்கு இசைய, அவனுக்குப் படைத் துணையாகத் தன் அன்புத் தலைவியைப் பிரிந்து சென்றிருந் தனன் தலைவன். மேற்கொண்டு சென்ற அரிய செயலையும் வெற்றியுடன் முடித்தவனாக, அவன் வீடு திரும்புதலையும், அதனால் தலைவி கொண்ட மகிழ்வையும், அவனுடைய உழையோர் சொல்லி இன்புறுகின்ற முறையிலே அமைந்தது இந்தச் செய்யுள்)

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
ஆறுநனி அறிந்தன்றோ இலெனெ! "தா அய்
முயற்பறழ் உகளும் முல்லையெம் புறவிற் 5
கவைக்கதிர் வரகின் சீறுர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமின்" என்றநின் மொழிமருண் டிசினே!
வான்வழங்கு இயற்கை வளிபூட் டினையோ? 10

மானுரு ஆகநின் மனம்பூட் டினையோ
உரைமதி - வாழியோ வலவ! - எனத்தன்
வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே! 15

“பாகனே! வாழ்வாயாக!"

“பாசறையிடத்து நம்முடன் இருந்த வேந்தன் அரிய போர்த் தொழிலை வெற்றிகொண்டு முடித்தனன். யானும் தலைவியை