பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 197



விளக்கம்: தலைவனுடன் உடன்போக்கிலே சென்றுவிட்ட தலைமகளை நினைந்து, வீட்டில் ஆடம்பரமாகப் பூச்சுப் புனைவுகளுடன் மணம் செய்ததற்குரிய அவள், இப்பொழுது காடும் மலையும் வருத்தமுற்றுக் கடந்து சென்று, அறியப்படாத தேயத்தே, அவனை மணந்து கொள்வாள் எனில், அது கொடிது! கொடிது! எனப் பேசுகின்றனர்.

தித்தி குறங்கில், ஆலத்து அலந்தலை நெடுவீழ், உரிஞ, அவன் அவளுடைய முன் கை அளைஇ அல்குல்பற்றி அவளை ஊக்க, அவளும் வழிநடந்த அந்தத் துயரை மறந்து ஊசலிற் களித்தாடினள்; அதன்பின் ஊக்கமுற்றவளாகித் தொடர்ந்து நடந்து செல்பவள் ஆயினள் என்க.

386. நாணினேன் யான்!

பாடியவர்: பரணர் திணை: மருதம். துறை: தோழிவாயின் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியது உம் ஆம். சிறப்பு: பாணனும் ஆரியப் பொருநனும் செய்த மற்போர் நிகழ்ச்சிச் செய்தியும், அங்கே கணையன் என்பான் நாணி நின்றதும்.

(தலைவன் ஒருவன் பரத்தையர் தொடர்பிலே களித்தா னென்று அவனுடைய மனைவி வருந்தி, அவனுடன் ஊடியும் வாழ்ந்து வந்தனள். அவ்வமயம், அவன் மீளவும் தன் இல்லிற்கு வந்து தோழியின் மூலமாகத் தலைவியின் உள்ளத்தை மாற்றிக் கூடுவதற்கு முயலுகின்றான். அப்போது தோழி, அவனுடைய எண்ணத்திற்குத் தான் உதவ மறுத்ததாகவே, அன்றித் தலைமகளின் தகுதியைக் கூறி அவனுக்கு அவள் இசையாள் என்றதாகவோ, அமைந்த செய்யுள் இதுவாகும்.)

          பொய்கை நீர்நாய்க் புலவுநாறு இரும்போத்து
          வாளை நாளிரை தேரும் ஊர!
          நாணினென் பெரும! யானே - பாணன்
          மல்லடு மார்பின் வலியுறு வருந்தி
          எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5

          நிறைத்திரண் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த
          திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
          கணையன் நாணி யாங்கு - மறையினள்
          மெல்ல வந்து நல்ல கூறி
          மைஈர் ஒதி மடவோய்! யானும்நின் 1O

          சேரி யேனே அயலி லாட்டியேன்
          நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்
          தொடுமணி மெல்விரல் தண்ணெணத் தைவர