பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

அகநானூறு -நித்திலக் கோவை





நுதலும் கூந்தலும் நீவி
பகல்வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே!'

15

பொய்கையிடத்தே வாழும் நீர்நாய்களுள், புலால் நாற்றத்தினையுடைய பெரிய ஆண் நாயானது, வாளைமீன்களைத் தன் நாள் உணவாக ஆராய்ந்து கொள்ளும் ஊரினையுடைய தலைவனே! பெருமானே!

மறைந்தவளாக மெல்ல மெல்ல வந்தாள். நல்ல சொற்கள் பலவும் கூறினாள். 'கரிய பெரிய கூந்தலையுடைய மடவோளே! யானுன் நின் சேரியிடத்தே உள்ளவளே' என்றாள். அயன் மனையிடத்து வாழ்பவள்; நினக்குத் தங்கையாக ஆகுவேன் என்றும் கூறினாள். தன் கையின் மோதிரம் அணிந்த மெல்லிய விரலினாலே, குளிர்ச்சியாக நெற்றியினையும் கூந்தலையும் தடவினாள் பகற்போதிலே இப்படி வந்து சென்ற, ஒள்ளிய நெற்றியுடைய நின் பரத்தையைக் கண்டேம்.

பாணன் என்பான் மற்போர் செய்த மார்பின் வலிமை தாக்கவே வருத்தமுற்று, அவனோடு எதிர்நின்று மற்போர் செய்தலை மேற்கொண்ட ஆரியப் பொருநன் என்பானது, ஆற்றல் நிறைந்த திரண்ட முழவனைய தோள்கள், பாணனின் கையகத்தே சிக்குண்டு சிதைந்தனவாய்த், தன்மை வேறுபட்டு முறிந்து கிடந்தன. அதனை நோக்கி, நல்ல போராற்றல் கொண்ட கணையன் என்பான் நாணித் தலைகவிழ்ந்தாற்போல, அப்போது, யானும் நாணமுற்று நின்றேன் அல்லேனோ?

சொற்பொருள்: 2. நாளிரை - அன்றைய உணவு. தேரும் - ஆராயும். 3 பாணன் - பாணன் என்ற பெயருடைய ஒரு மல்லன். 4. வலியுற - வலிமை பொருந்தித் தாக்குதலைச் செய்ய, நிறைத் திரண் முழவுத் தோள் - ஆற்றல் நிறைந்து திரண்டு முழவுபோல விளங்கும் தோள்கள். 'நிறைத்தாள் முழவுத்தோள்’ எனவும் பாடம்; அப்போது, தாள்களும் தோள்களும் சிதைவுற்றன என்று கொள்ளுக. 7 திறன் வேறு கிடக்கை-திறன் வேறுபட்டுக் கிடந்த நிலைமை. 12. நுங்கை - தங்கை. 13. தொடுமணி மெல்விரல் - மோதிரமணிந்த மெல்விரல்.

விளக்கம்: 'பாணனோடு பொருத ஆரியப் பொருநனின் திறன்வேறு' கிடக்கையினைக் கண்டு, நற்போர்க் கணையன் நாணினான் என்றதைச் சிந்திக்க வேண்டும். ஆரியப் பொருநன் மிகச் செருக்குற்றுத், 'தன்னை வெல்பவர் எவரும் இல' ரெனக் கூறினான் ஆதல் வேண்டும். அதனை நம்பிக் கணையன் அவனுக்குப் பாணனுடன் பொருத ஏற்பாடு செய்தானாதலும் வேண்டும். நற்போர் வல்ல கணையன் தான் நம்பிய ஆரியப் பொருநனின் வலியனைத்தும், பாணனாற் சிதைவுற்றுப் போய்,