பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

அகநானூறு - நித்திலக் கோவை



அவர் கையாற் புனைந்து அழகு செய்த, பொதிதலால் மாட்சியுற்ற எம் கூந்தல் முடியினைக் காணுந்தோறும், அந்தப் பண்டைப் பொழுதின் பழைய அணியே எம்மால் நினைக்கப்பபடுகின்றது. அதனால்,

சென்று, இன்றோடு சில நாட்களே கழிந்தனவாயினும், எம் கண்கள் சற்றும் துயிலாதனவாகுமே!

சொற்பொருள்: 1. பார்வல் - பார்க்கும் வன்மையுடைய! பார்த்தல் இரையை நாடிக் கூர்ந்து நோக்கித் திரிதல். 5 வரிமென் முகைய - வரிகளையும் மென்மையையும் கொண்ட அரும்புகள். அதிரல் - காட்டுமல்லிகை.3.மல்கு-நிறைந்த வட்டியர்-வட்டக் கூடையினர்; வாய் அகன்று அகற்சியும் வட்டமும் பொருந்த, ஒலையினால் முடையப்பெறும் கூடை இது. 4. ஒழித்த முற்றவும் எம் வீட்டிலே கொட்டிச் சென்ற, 5. ஞாங்கர் - புறத்தே. 10. கடாஅம் - மதம் 14 என்றுழ் வைப்பு - வெப்பமிக்க காட்டிடம்.

விளக்கம்: காட்டு மல்லிகையின் மென்மையும் வரியும் கொண்ட அரும்புகளை வட்டி நிறையக் கொண்டு அவற்றைக் கொள்வார் அறியாராய், விற்பவர் தம் வீட்டில் கொட்டிச் செல்ல, அவற்றுடன் தேனொழுகும் முல்லையினையும் கூந்தலிற் பொதிந்து அழகு செய்திருப்பாள் தலைவி. மாலைக்காலத்தில், அப்பூக்களைப் புறத்தே ஒதுக்கி, அவள் கூந்தலில் துயின்றவன் தலைவன். அவன் பிரிந்து சென்றதனால், இப்போது புனைந்துள்ள தன் பொதிதல் மாட்சியுற்ற கூந்தல் முடியினைக் காணும் போதெல்லாம்; பண்டைய நாளில், தலைவன் ஒதுக்கித் துயின்ற பழவணியே அவளால் நினைக்கப்படுவதனால், அவள் கண்கள் சற்றும் மூடாவாயின என்று கொள்ளுக.

வட்டி - வாயகன்ற ஓலைக்கூட இந்நாளினும் மலர் வாணிகர் இக்கூடைகளுடன் விளங்குவதைக் காணலாம்.

மதயானை தன் கொம்பை அசைக்க மாட்டாதாய்ப் பசியால் வலியிழந்து, தன் கையினை வாயிற் புகுத்தி வருந்தியிருக்கும் வெம்மையுடைய காடு என்க. அதன் வாயிற் புகுத்தியிருக்கும் அதன் துதிக்கையானது குன்றிடத்தே புகும் பாம்பினைப் போலத் தோன்றும் என்க.

392. நலம் தருவேன் நான்!

பாடியவர்: மோசீரேனார். திணை: குறிஞ்சி. துறை: பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. சிறப்பு: நன்னனின் பேராண்மை.