பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 213


பெற்றவன் நன்னன் ஆவான். அவனைப்போல, இழந்த நின்நலத் தினை மீளவும் தருபவளாக அவனைக் கூட்டிவைப்பவளும் யானாக ஆவேன்!

சொற்பொருள்: 3 உயக்கம் - வருத்தம் 4 யாக்கைச் சிதைவு - உடலின் அழிவு 5. பின்னிலை இரந்து பின்னிற்றலாகிய தன்மை. முனியான் - வெறான். 6. தாது - பொன். தையல் - அழகியவள், ! தலைவியைக் குறித்தது. 8. புணை - பொறுப்பு.9. தண்டுமாயின் வற்புறுக்கும் ஆயின் 12. கணமழை - மேகக்கூட்டம், 14 கழுது . பரண். சேணோன் - குன்றவன் 15. வல்வாய்க் கவண் - விரைந்து செல்லுதலையுடைய கவண்கல்.20. உரற முழங்க 21.வென்வேல் - வெற்றிவேல். வேந்தன் - பகையரசன், நன்னனை வென்று அரணைக் கைப்பற்றிப்பின் நன்னனால் வெல்லப்பட்டு, அரணை அவனிடம் விட்டு வந்தவன். 22. முனைகொல் தானை பகைவரது போர் முனையைக் கொன்றழிக்கும் வீரச்செறிவு உடைய படை 23 வரம்பு - எல்லை; ஆற்றல். 25. வேல்வலித் தோற்றம் - வேலினது வலிமைத் தோற்றம்.

விளக்கம்: ‘மலையுடன் வெரூஉம் மாகல் வெற்பன்' என்றது, அந்த வெருவுதலுக்குக் காரணமாய் கவனெறிந்த கானவனைப்போல. அவனும் ஆற்றல் உடையவன் என்றதாம். சேணோன் - சேணிடத்து இருப்பவன்; தினைப்புனம் காவல் பூண்ட கானவன். கவண்கல்லின் கடுவெடியும், புலியின் உரறுதலும் வாரணத்தின் கதறுதலும் கேட்டு, இடிமுழக்கம் என மயங்கி, மயில் ஆடும் வெற்பவன் என்க.

இதனால், அவன் தகுதிப்பாடும், பின்னிலை முனியான் என்றதனால் அவனுடைய காதற் பெருக்கும் தன்னை வேண்டிய எளிமையும் சூளும் கூறித் தோழி குறைநயந்தாள் என்க.

பகை வயப்பட்ட அரணிலுள்ளாரை, மீளவும் பழைய படி தான் வென்று சிறப்புறச் செய்த நன்னனைப்போலத், தானும், தலைவிக்கு உதவுவதாகத் தோழி உறுதி கூறுகின்றனள்.

393. மறந்து நீடலர்!

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. சிறப்பு: புல்லியின் நாட்டுச் சிறப்பு.

(தலைவனின் பிரிவுத்துயரினாலே வருந்தி வாட்ட முற்றிருக்கும் தலைவிக்குத் தோழி தலைவன் குறித்தபடி தவறாது வருவான் என்று கூறி அவளைத் தேற்றுகின்ற முறையிலே அமைந்த செய்யுள் இது.