பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 215


உடைய தாயர்கள். பண்ணைக்கீரையின் வெண்மையான பழத்தினது அரிசியை ஒப்பத்திரிமரம் தேய்த்த, சுளகினால் கொழிக்கப்பெற்ற வெண்மையான அரிசியைப் பூண் மாட்சிமையுற்ற உலக்கையால் முறைப்படக் குற்றி உரலிற் பெய்து தீட்டுவர். உரற்குழி நிறைந்த அவ்வரிசியை, அங்குள்ள பெருஞ்சுனையின் நீரோடும் முகந்து, களிமண்ணாற் செய்த பானையிலிட்டுக், கல்லடுப்பின் மேல் ஏற்றிக் கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த தாதினைப்போல, இடையர் அவிழாகிய சோற்றினை ஆக்குவர். அதனை மதர்த்த நல்லாவின் பாலோடு கூடியிருக்கும், மிக்க புகழுடைய புல்லி என்பவனது தேனிறால் தொங்கும் உயரிய பாறைகளையுடையநல்ல நாட்டின் அப்பாலுள்ள வேங்கடமலையினைக் கடந்தும் சென்றுள்ளவர் அவர் ஆயினும்

அழகு பொருந்திய மயிலின், தொகுதிகொண்ட தழைத்த தோகையினைப்போல, மயிர்ச்சாந்து பூசப்பெற்று விளங்கும் தண்ணிய நறிய கூந்தலில், குற்றமில்லாத குவளையின் மலரிதழோடு, விளங்கும் இதழ்களுடன் வேனிலிற் பூக்கும் காட்டுமல்லிகைப் பூவினையும் குடியுள்ள, நின்னுடைய கூந்தலிடத்தே துயிலும் இன்பம்வாய்ந்த புணர்ச்சியாகிய இனிதான துயலினை மறந்து, அவ்விடத்து அவர் தாழ்த்திருப்பவர் அல்லர்.

சொற்பொருள்: 1.கோடு-மலை முடிகள். பிறங்கல்-பாறைகள். 2. வேறுபுலம்-வேற்று நாடு, 3. காய்பசி-காய்தலையுடைய மிக்க பசி. 4. இதைச் சுவல்-காடு திருத்தியமேடான, புதிதான கொல்லை. கலித்த-தழைத்த 5.பொங்கழி தூற்றாப் பொலி. 6. கவட்டடி-மாடுகளின் கவறுபட்ட குழம்புகள். உதிர்வைஉதிர்ந்த தானியம். 7. தெறீஇ-தெறித்துவைத்து, காயவைத்து என்க. 8. வரியணி பணைத்தோள்-வரியணிந்த பணைத்த தோள்கள்: வரி-இரேகைகள். 9. பண்ணை-ஒருவகைக் கீரை. 10. சுழல் மரம்-மரத்திரிகை, வரகரிசியின் மேல் தோலை நீக்குவதற்கு இதிலிட்டுச் சுழற்றுவர். 11. ஊழில்-முறையோடு. 12.உரல் முகங் காட்டல்-உரலிலிட்டுக் குற்றுதல். சரை-உரலின் குழிவான பாகம் 14 களிபடு குழிசி-களி மண்ணால் வனையப் பெற்ற பானை, மண்சால். 15. கடுக்கை-கொன்றை 16. குடவர் - இடையர் பொங்கு அவிழ் புன்கம்-பொங்கிய அவிழாகிய சோறு. 17. மதர்வை-மதர்த்த, 18. நிரை-ஆநிரை, 21. தோடு, கொள் - இதழ்கொண்ட மயிலிறகினைக் குறித்தது. 22, தகரம் மயிர்ச்சாந்து 25. அதிரல்-காட்டு மல்லிகை, 26 ஏமுறு புணர்ச்சி. இன்பம் வாய்ந்த புணர்ச்சி.