பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

அகநானூறு - நித்திலக் கோவை



'தெறலரும் கடவுள் முன்னர்த் தேற்றி' என்றதனால், அவன் சூழ் பொய்த்தவிடத்துக் கடவுள் அவனைத் தண்டிப்பதும் நேரும் என்பதனை நினைவுறுத்தினள். 'ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப' என்றது, அவளும் அவனும் இன்புறுதலாகிய ஆர்வம் இருவர் உள்ளத்தும் மென்மேலும் மிக்குப் பெருக என்பதாம். இதனால், அவளுடைய காதலுடைமையும், அவனுடைய கடமை நிலைமையும் கூறினள்.

'காவிரி அணிநசைஇ, அத்தியைக் கொண்டொளித் தாங்கு நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல்' என்றதனால், மனைவி வவ்வுதலைக் கருதினால், தான் அதனைத் தடுக்க ஏலாத நிலையினை உடமையினையும் உணர்த்தினள்.

‘ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்கு விற்பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்' ஆகிய சேரமான், சேரன் செங்குட்டுவனோ என்பதனைத் தெளிந்து ஆராய்தல் வேண்டும்.

'நலம் தந்து சென்மே' என்றதனால், அந்தக் கவலையினால், அவள் நலன் அழிந்திருந்த தன்மையும் புலனாகும்.

397. படர்தரத் துணிந்தோன்!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

(மகள் தன்னுடைய காதலுடன் சென்றுவிட்டனளாக, அந்த ஆற்றாமையினாற் புலம்பும் செவிலித்தாய், இங்ஙனம் நொந்து கொள்ளுகின்றாள். அவளுடைய உள்ளத்தே, தலைவியால் நிலவிய காதலன்பு இதனாற் செவ்வையாகப் புலனாகும்.)

என்மகள் வெருமடம் யான்பா ராட்டத்
தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப
முழுவுமுகம் புலரா விழவுடை வியனகர்
மணனிடை யாகக் கொள்ளான் கல்பகக்
கனமழை துறந்த கான்மயங்கு அழுவம் 5

எளிய வாக ஏந்துகொடி பரந்த
பொறிவரி அல்குல் மா அயோட்கு எனத்
தனிந்த பருவம் செல்லான் படர்தரத்
துணிந்தோன் மன்ற துனைவெங் காளை
கடும்பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப் 10

போழ்புண் படுத்த பொரியரை ஓமைப்
பெரும்பொளிச் சேயரை நோக்கி ஊன்செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்துவந்து இறுக்கும்