பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 233


நூற்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள்ளும் இவர் செய்யுட்கள் காணப்பெறும். பெரும்பாலும் நெய்தல் திணைச் செய்யுட்களைப் பாடியவர் இவர் ஐங்குறு நூற்றின் நெய்தலைக் குறிக்கும் (102.200.) நூறு செய்யுட்களையும் செய்தவர் இவரே. இந்நூலின் 370 ஆவது செய்யுளில், தோழி தலைவியை நோக்கி, ‘நல்லில் நோயொடு வைகுதியாயின் நுந்தை அருங்கடிப் படுவலும் என்றி; மற்று, நீ செல்லல் என்றலும் ஆற்றாய்; செலினே, வாழலென் என்றி' எனக்கூறுவது, காதலுடைய கன்னியரின் இக்கட்டான மனநிலையை நன்றாக விளக்கிக் காட்டுவதாகும். இங்ஙனமே, இவரது 390ஆவது பாடலும் சிறப்பான நயத்துடன் விளங்குவதனைக் காணலாம். உப்பு விற்கும் இளங்கன்னி யிடத்துத் தலைவன் மெய்வாழ உப்பின் விலையாதோ? இளங்கன்னியிடத்துத் தலைவன் ‘மெய்வாழ் உப்பின் விலை எனக் கேட்பதும், அவள் முதலிற் சினந்து, 'யார்ரோ எம் விலங்கியீ இரென?' வினவினும், அடுத்து, 'மூரல் முறுவலளாகப் பெயர்ந்ததும், ஒரு நல்ல சுவையமைந்த காதற் காட்சியாகும்.'

ஆவூர் மூலங்கிழார் (341)

வேளாண் மரபினராகவும், மூல ஒரையிலே பிறந்தவராகவும், கிழார்' என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றவராகவும் திகழ்ந்த தமிழ்ச் சான்றோர் இவராவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கீரஞ்சாத்தன், மல்லிகிழான் காரியாதி, சோணாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் ஆகியோரைப் பாடியுள்ளமையினால், இவரை அவர்களது காலத்தவர் எனலாம். இவர் பாடல்களாகச் சங்கத்தொகை நூற்களுள் பத்தொன்பது செய்யுட்களைக் காணலாம். அகநானூறு 156ஆவது செய்யுளில், மருதநில மகளிர் நீர்த்துறைக்கண் தெய்வத்திற்குப் பலியிட்டு வழிபடும் வழக்கத் தினை இவர் குறிப்பிடுகின்றனர். 'கோங்கும் கொய்குழை யுற்றன; குயிலும் விளிக்கும்; இது மாணலம் நுகரும் துணை உடையோர்க்கு யாணர் மன்; எமக்கோ உய்தகை இன்றால் என, வேனிற் காலத்துப் புலந்துகூறும் தலைவியை இச்செய்யுளுள் காட்டுகின்றார் இவர்.


இடைக்காடனார் (304, 374)

'இடைக் காடு’ என்னும் ஊரினராதலின் 'இடைக் காடனார்’ எனப்பெற்றனர். குமரிமாவட்டத்தும், தஞ்சை மாவட்டத்தும் 'இடைக்காடு’ என்ற பெயருடைய ஊர்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றினைச் சார்ந்தவர் இவர் ஆவர்.